
இவனது இயர் பெயர் Mark Basseley Youssef , இவன் புனை பெயர், மற்றும் இன்டர்நெட்டை பயன்படுத்திய குற்றத்திற்காகவும் போலிஸ் அதிகாரிகளிடம் ஆரம்பத்தில் போய் கூறிய குற்றத்திற்காகவும் இவனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி இவன் படம் தயாரித்ததற்காக இந்த தண்டனை இவனுக்கு வழங்கப்படவில்லை.
எதிர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில், ”படத்தில் கூறப்பட்டுள்ள விசயங்களுக்காகவோ அதனால் ஏற்பட்ட பாதிப்பிற்காகவே இவர் கோர்ட் முன் நிறுத்தப்படவில்லை எனக் கூறியதும் நீதிபதி ”Christian Snyder” ”ஆம்நான் ஒத்துக் கொள்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.
சரி, நபிகள் நாயகத்தை இழிவு படுத்தியவனுக்கு ஒரு வருட சிறை தண்டையாவது அமெரிக்கா கொடுத்துள்ளதே என்று முஸ்லிம்கள் நினைத்து தங்களது கொந்தளிப்பை சற்று தளர்த்தி கொள்ளவிடாமல் , ”உங்க நபிகள் நாயகத்திற்காண்டியோ அல்லது முஸ்லிம்களுக்காண்டியோ நாங்க தண்டன கொடுக்கல நாங்க சொன்ன விதிமுறையை மீறிட்டான் அதான் அவனுக்கு தண்டன கொடுத்திருக்கின்றோம்” எனக் கூறி முஸ்லிம்களை அமெரிக்கா மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.
இதை உருதிபடுத்தும் வண்ணம் இந்த படத்தை பரப்பிய மேலும் பல நாடுகளில் திரையிடப் போகின்றேன் எனக் கூறிய பாஸ்டர் Terry Jones! க்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை. இந்த படத்தை நீக்க மறுத்த Youtube க்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முஸ்லிம்களின் உணர்வுகளை பற்றி எங்களுக்கு கவலை இல்லை , நபிகள் நாயக்தை இழிவு படுத்தி படம் தயாரிப்பது எங்களுக்கு பெரிய விசயமல்ல மாறாக எங்கள் நாட்டு நீதிபதிகளின் நிபந்தனைகள் தான் எல்லாவற்றையும் விட முக்கியமானது என்ற அமெரிக்காவின் போக்கு முஸ்லிம்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.
0 comments:
Post a Comment