படுக்கை அறைக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து தனக்கு பழக்கமான இலங்கை தம்பதியை தாக்கியதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் மீது டுபாய் குற்றவியல் நீதிமன்றத்தில்
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
10 நாட்களுக்கு முன்னரே டுபாய் வந்த இலங்கையரான சந்தேக நபர், தாக்கப்பட்ட தம்பதியின் வீட்டின் ஒருபகுதியில் வசிப்பதற்கு தன்னை அனுமதிக்குமாறு கேட்டதாக பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் கூறினார்.
ஜுன் மாதம் 30ஆம் திகதி 2011ஆம் ஆண்டு சந்தேக நபர் வேறு இருவருடன் வந்து தனது கணவருடன் சேர்ந்து மது அருந்தியதாகவும் அவர் கூறினார்.
காலை 5.30 மணிக்கு கதவை உடைத்துக்கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்த சந்தேக நபர், தனது கணவனின் தலையிலும் உடம்பிலும் தாக்கியதாகவும் தடுக்கப் போன தன்னை கத்தியால் குத்துவதற்கு துரத்திக்கொண்டு வந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
தன்னை வீதிவரை துரத்திவந்த சந்தேக நபரை 4 அரேபியர்கள் மடக்கிப்பிடித்து பொலிஸில் ஒப்படைத்ததாகவும் அவர் கூறினார்.
சந்தேக நபர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டுள்ளார். தாக்கப்பட்டவர் தான் சந்தேக நபருடன் சேர்ந்து மது அருந்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.
வழக்கு ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment