Home » » இலவசமாக M E M Tech படிக்க GATE நுழைவு தேர்வு

இலவசமாக M E M Tech படிக்க GATE நுழைவு தேர்வு

Written By STR Rahasiyam on Friday, November 9, 2012 | 4:38 AM


GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம் போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Tech படிக்க மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது. இந்த தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் (ஹாஸ்டல், உணவு, புத்தகம்) நிறைவேற்றிகொள்ளலாம். இதில் முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும் உள்ளது. தேர்வை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய http://www.gate.iitb.ac.in/gate2011/
இந்தியாவில் 8 இடங்களில் உள்ள IIT, 20 இடங்களில் உள்ள NIT, டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech, Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது, இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது). இந்த கல்வி உதவி தொகையை வாங்குவது மிகவும் எளிது. நீங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கு எண்ணுக்கு மாதமாதம் பணம் வந்து சேர்ந்துவிடும். இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன
இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை. தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற கட்டுரை நமது tntj.net (http://www.tntj.net/மாணவர்-பகுதி/கல்வி-வழிகாட்டி/தேர்வில்-அதிக-மதிப்பெண்/) இணையதளத்தில் உள்ளது.
GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம்
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 27,
ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். http://onlinegate.iitm.ac.in/iitweb
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : சென்னையில் உள்ள IIT மற்றும் குறிபிட்ட State Bank of India கிளைகள் (தபால் மூலமும் விண்ணப்பம் பெறலாம்.)
விண்ணப்பத்தின் விலை : ரூ.1,000 (ஆன்லைனில் ரூ.8,00)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Chairman, GATE Office, Indian Institute of Technology Madras, Chennai 600 036,
மேலதிக விளக்கம் பெற தொடர்புகொள்ள வேடிய தொலைபேசி எண் : 044-2257 8200 (சென்னை IIT)
தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
1. B.E/B.Tech எல்ல பொறியியல் படிப்புகள் படித்து முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்
3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல்( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்
தேர்வு நடைபெறும் தேதி : ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 13,
தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : மார்ச் 15
-எஸ்.சி்த்தீக் எம்டெக்
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger