
இந்நிலையில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சர்ச்சைக்குரிய படத்தின் காட்சிகளை நீக்கிவிட மறுத்த யூ ட்யூப் தளத்தை முற்றாகத் தடைசெய்யுமாறு பாகிஸ்தானியப் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், கடந்த திங்கட்கிழமை (17/09/2012) முதல் பாகிஸ்தானிய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் உத்தரவுக்கு இணங்க பாகிஸ்தானிலே யூ டியூப் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
யூ ட்யூபில் குறித்த படத்தின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்துவிட்டு ஆத்திரமடையும் மக்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில், பங்களாதேஷிலும் மேற்படி சமூக வலைதளம் தடைசெய்யப்பட்டுள்ளது.
உலக முஸ்லிம்களின் சீற்றம், "தனிமனித சுதந்திரத்தை மதித்தல்" என்ற போர்வையில் முஸ்லிம் மக்களைப் புண்படச் செய்யும் மதநிந்தனைத் திரைப்படத்தைத் தடைசெய்ய மறுத்த அமெரிக்க அதிகாரத் தரப்பை நோக்கித் திரும்பியுள்ளது.
0 comments:
Post a Comment