இதையடுத்து, பெண்களுக்கான உள்ளாடை கடைகளில் பெண்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் சவுதி அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே, இருக்கும் ஆண் பணியாளர்களை மாற்றி பெண் பணியாளர்களை நியமிக்க போதிய கால அவகாசம் தேவை என கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை பரிசீலித்த அரசு, அவகாசம் அளித்தது. பல கடைகளில் பணியாற்றி வந்த ஆண்களுக்கு பதில் பெண்கள் நியமிக்கப்பட்டனர். இந்த கால அவகாசம் இந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து இந்த உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கான உள்ளாடை கடைகள் இழுத்து மூடப்பட உள்ளன.
0 comments:
Post a Comment