இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன்று செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தது.
ஹிஜ்ரி 1433 புனித துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று செவ்வாய்க்கிழமை இரவு நாட்டின் எந்தவொரு பாகத்திலும் தென்படவில்லை. இதற்கமையவே 27ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெருநாளை கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
புனித துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
0 comments:
Post a Comment