கடந்த எட்டாம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 21759 வாக்குகளைப்பெற்று முஸ்லீம் காங்கிரசின் பட்டியலில் மூன்றாம் இடத்தைப்பெற்றிருந்த எம்.ஐ.எம்.மன்சூர்இ கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்ததின் பயனாக கிடைக்கப்பெற்ற இரண்டு அமைச்சுப்பதவிகளில் ஒன்றான சுகாதார மற்றும் விளையாட்டு சமூகசேவை, கூட்டுறவு அமைச்சை பெற்றுள்ளார்.
மிக நீண்ட காலமாக மறைந்த அமைச்சர் மஜீத் க்குப் பின்னர் மறைந்த அமைச்சர் அன்வர் இஸ்மாயில் சம்மாந்துறையின் அரசியல் தலைமைத்துவத்தை நடாத்திச்சென்றனர். அன்வர் இஸ்மாயில் திடீர் மறைவைத்தொடர்ந்து அரசியல் அந்தஸ்த்து என்ற தேவை சம்மாந்துறைக்கு இல்லாமலேயே இருந்தது.
தற்சமயம் மாகாண சபையின் ஊடாக நெடிய மன்சூர் என செல்லமாக அழைக்கப்படும் எம்.ஐ.எம்.மன்சூர் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் ஊடாக அமைச்சராக நியமிக்கப்பட்டதன் காரணமாக சம்மாந்துறைக்கு மீண்டும் அரசியல் அந்தஸ்த்து கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
வாகன ஊர்வலமாக அழைத்துச்செல்லப்படும் அமைச்சர் மன்சூரை பட்டாசு வெடித்து பெண்கள் குரவை முழங்க மிகுந்த மகிழ்வுடன் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment