எங்கே தொழுவது
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்கு செல்லாமல்) திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள்.
புகாரி 956 முஸ்லிம் 1612 இல் பார்க்க
பெண்களும் தொழுகைக்கு வருவது அவசியம்
பெருநாளில் நாங்கள் தொழுகைக்கு திடலுக்கு புறப்பட வேண்டும் எனவும் கூடாரத்தில் உள்ள கன்னிப் பெண்களும் மாத விளக்கு ஏற்பட்ட பெண்களும் பெருநாள் தொழுகைக்கு புறப்பட்டு செல்ல வேண்டும் என நபியவர்கள் கட்டளை இட்டனர். பெண்கள் ஆண்களுக்கு பின்னால் இருப்பார்கள்.
புகாரி 971 முஸ்லிம் 1615 இல் பார்க்க
நபி வழிக்கு மாற்றமான புது வழி
மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுல் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம் (புகாரி 1190 இல் பார்க்க) என சொன்ன நபியவர்கள் மஸ்ஜிதுல் நபவியில் தொழாமல் திடலில் தொழுவதுதான் நபிவழி. பள்ளி,வீடுகலில் தொழுவது புது வழி என்பதை புரிந்து கொள்ளா வேண்டும்.
பெருநாள் தொழுகயும் சுன்னாவும்
பாங்கு இகாமத் இல்லை (முஸ்லிம் 1610 இல் பார்க்க)
முன் பின் சுன்னத்துக்கள் இல்லை (புகாரி 1431முஸ்லிம் 1616 இல் பார்க்க)
மிம்பர் இல்லாமல் தரையில் நின்று உரை நிகழ்த்தல்(அபூ தாவுத் 963)
தொலும் முறை
1-அல்லாஹு அக்பர் எனக் கூறி இரு கைகலயும் தோள் அல்லது காது வரை உயர்த்தி வலது கையை இடது கையின் குடங்கை அல்லது மணிக்கட்டின் வெளி புறத்தில் வைத்து நெஞ்சில் காட்டிக்க் கொள்ளல்.
2-ஆரம்ப தக்பீரை தவிர முதல் ரகயத்தில் 7 முறை தக்பீர் சொல்லுதல் ஒவ்வரு முறையும் தக்பீர் கட்டுவது நபி வழி அல்ல
3-தக்பீருக்கு இடையில் எந்த துவவும் ஒதுவதட்க்கு ஆதாரம் இல்லை
4-சூரத்துல் பாத்திக ஒதுதல்
5-துணை சூரா ஒதுதல்
6- வழமை போன்று ருகூ சுஜுது செய்தல்
7-இரண்டாம் ரகயத்தில் அல்லாஹு அக்பர் என 5 முறை தக்பீர் சொல்லுதல் ஒவ்வரு முறையும் தக்பீர் கட்டுவது நபி வழி அல்ல
8-முதல் ரகயத் போன்று அணைத்தும் செய்து முடித்து ஸலாம் கொடுத்தல்.
** கூட்டு துவா ஓதாது இருத்தல் குர் ஆன் 7:55 இல் பார்க்க
**தரயில் நின்றவாறு உரை நிகழ்த்தல் இப்னு மாஜா 1278 இல் பார்க்க
**பெண்களை மறைக்கும் விதமாக திரை இடது இருத்தல்
**அன்றைய தினம் அல்லக்ஹு அக்பர் என்று மட்டும் அதிகம் அதிகம் சொல்லால்
**ஒரு வழியால் சென்று மறுவழியால் வருதல் புகாரி 986
**அன்றைய தினம் அதிகம் அதிகம் தர்மம் செய்தல் புகாரி 98 இல் பார்க்க
நபி வழி நடப்போம்........! புது வழி தவிர்ப்போம்........!
0 comments:
Post a Comment