தனது ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை தாறுல் உலும்வித்தியாலயத்தில் பயின்று அதன் பின் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலையத்தில் உயர்தரக்கல்வியை விஞ்ஞானப்பிரிவில் கற்றுக்கொண்டிருக்கையில் 1973ம் ஆண்டு கணித/விஞ்ஞான ஆசிரியராக சம்மாந்துறை அல்-மர்ஜான் மக்ளிர் கல்லூரியில் ஆசிரியர் நியமனம் கிடைத்தது 1974ம் ஆண்டு 12 மாணவர்களை 5ம் தர புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைச்செய்து நன்மதிப்பை பெற்றிருந்தவர் 1976/1977 பலாலி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் உடற்கல்விப்பயிற்ச்சி ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டு 2வருட பயிற்சியினை முடித்தபின்னர் 1978ம் ஆண்டு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலைய தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியராகநியமனம் பெற்று அக்காலத்தில் அதிகமான மாணவர்களை ஒட்டம்,பாய்தல் பெருவிளையாட்டு போன்ற நிகழ்ச்சிகளில் அகில இலங்கை மட்டத்துக்கென பயிற்றுவித்து வெற்றிகளை ஈட்டித்தந்தவர் பாடசாலைக்கும் பெருமைதேடித்தந்தவர்.
2000 ஆண்டு பிரதி அதிபராக பொறுப்பேற்று 9,10,11 ம் தர ஆண்கள்பிரிவிற்கு பொறுப்பு அதிபராக செயல்பட்டு அந்த மாணவர்களை நன்றாகவழிநடாத்தி அவர்களின் O/L பெறுபேற்றை உயர்த்தி பல சாதனைகளும் புரிந்தார் இக்காலத்தில் ஆசிரியர்பற்றாக்குறை காணப்பட்டது. பல இடங்களில் இருந்து ஆசிரியர்களை இப்பாடசாளைக்கு கொண்டுவருவதில் கடும் அக்கறைகாட்டி அவர்களை இப்பாடசாலைக்கு கொண்டும் வந்தார்.
இவர் இப்பாடசாலையில் கட்டுப்பாட்டுக்குழு, விளையாட்டுக்கழகத்தின் தலைவராகவும், பாடசாலை பெளதீக் வளங்கள், தளபாடம், இலவசப்புத்தகம், இலவச சீருடை விநியோகம், பாடசாலையின் சிரமதானக்குழுக்களின் பொருப்பாளராகவும் செயற்பட்டர் இன்னும் O/L மாணவர்களின் மேலதிகவகுப்புக்களை ஆரம்பித்தார் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுக் கொடுத்த இவர் பாடசாலையின் முதலுதவிப்படைக்கு தலைமைதாங்கிச்சென்று அம்பாரை மாவட்ட முதலுதவிப்படைக்கு ஆணையாளராகவும் பதவியேற்றார்.
இவ்வாறு தமது பத்விக்காலத்தில் தம்மிடம் ஒபடைக்கப்பட்ட வேலையை செவ்வனே நிறைவேற்றி நன்மதிப்பையும் புகழயும் ஈட்டிக்கொண்டார்.
thanks to sammanthuraitk
thanks to sammanthuraitk
0 comments:
Post a Comment