Home » » காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்த டுவிட்டர் - டுபாயில் சம்பவம்

காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்த டுவிட்டர் - டுபாயில் சம்பவம்

Written By STR Rahasiyam on Tuesday, August 21, 2012 | 2:53 PM




jm
காணாமல் போன குழந்தையை, "டிவிட்டர்' உதவியுடன், சில மணி நேரங்களில், போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

துபாயை சேர்ந்த தம்பதியர், ரம்ஜான் பண்டிகையையொட்டி பொருட்களை வாங்குவதற்காக வணிக வளாத்துக்கு சனிக்கிழமை, 18ம்தேதி சென்றனர். கடைக்கு வெளியே, காரை நிறுத்தி விட்டு, குழந்தை தூங்கிக் கொண்டிருந்ததால் காரிலேயே விட்டு விட்டு, பொருட்களை வாங்கச் சென்றனர். சில நிமிடங்களில் திரும்பி வந்த அந்தத் தம்பதியருக்கு, அதிர்ச்சி காத்திருந்தது.

காரையும், குழந்தையையும் காணவில்லை. பதறியடித்துக் கொண்டு போலீசிடம் விஷயத்தைத் தெரியப்படுத்தினர். போலீசார் இந்த விஷயத்தை "டிவிட்டரில்' (சமூக வலைத்தளம்) வெளியிட்டனர். இந்தத் தகவலை, 1,700 பேர் உடனடியாகப் படித்தனர். ஷார்ஜாவை சேர்ந்தவர், இந்தத் தகவலை படித்து விட்டு, தங்கள் வீட்டருகே காணாமல் போன கார் நிற்பதாகத் தெரிவித்தார். உடனடியாக போலீசார், அங்கு விரைந்து காரையும், காருக்குள் பத்திரமாக இருந்த குழந்தையையும் மீட்டனர். இது குறித்து போலீஸ் அதிகாரி குறிப்பிடுகையில், "எல்லாப் புகழும் டிவிட்டருக்கே' என்றார்.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger