Home » » யாசர் அராபத்தின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது

யாசர் அராபத்தின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது

Written By STR Rahasiyam on Tuesday, July 10, 2012 | 10:22 AM



பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவரை பாரீசில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி சுஹா அராபத் புகார் தெரிவித்தார். எனவே, அவரது உடல் மாதிரிகள் பரிசோதனைக்காக சுவிட்சர்லாந்து நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

அந்த நிறுவனம் சமீபத்தில் வழங்கிய தனது அறிக்கையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்தது. அதாவது அவரது உடலில் கதிர்வீச்சு விஷமான பொலேனியம் பரவி இருப்பதாக அறிவித்தது.

எனவே, இவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அது பாலஸ்தீன மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அவரது சாவின் உண்மை நிலையை அறிய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். எனவே, யாசர் அராபத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதற்கான அனுமதியை பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ் வழங்கியுள்ளார்.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger