Home » » யூ டியூபுக்கு பதிலடி கொடுக்க உதவுங்கள் பீஜேயின் முக்கிய அறிவிப்பு

யூ டியூபுக்கு பதிலடி கொடுக்க உதவுங்கள் பீஜேயின் முக்கிய அறிவிப்பு

Written By STR Rahasiyam on Saturday, September 22, 2012 | 2:08 PM

யூ டியூப் என்ற அயோக்கிய நிறுவனம் மதங்களை நிந்தனை செய்யக் கூடாது என்ற விதியின் கீழ் செயல்படுவதாக சொல்லிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கீழ்த்தரமான வீடியோவை நீக்க முடியாது. எங்கள் விமுறைக்கு உட்பட்டே அது உள்ளது என்று திமிராக பதில் சொல்கிறது. இதன் தயாரிப்பில் யூ டிய்ய்புக்கும் பங்கு உண்டு என்ற சந்தேகம் இதனால் வலுப்படுகி
றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கும் ஒவ்வொருவரும் அடுத்தவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிராமல் தன்னால் இயன்ற அளவுக்கு யூடியூபுக்கு நட்டத்தை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற விஷமத்தனமான ஒரு தளம் உலகில் இருப்பதே மிகவும் ஆபத்தானது என்ற அச்சம் இதனால் ஏற்படுகிறது. இன்னும் பல ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளித் தெளிக்க யூ டியூப் தயாராக இருப்பதை நாம் உணர முடிகின்றது.

எனவே இதன் முதல் கட்டமாக அனைத்து கொள்கைச் சகோதர்ர்களுக்கும் முக்கிய வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

எனது உரைகள் கேள்வி பதில்கள் இஸ்லாம் இனிய மார்க்கம் போன்ற அனைத்தையும் பல்வேறு சகோதர்ர்கள் யூடியூபில் பதிந்துள்ளனர். யாரெல்லாம் எனது உரைகளை யு டியூபில் பதிந்துள்ளார்களோ அவர்கள் அனைவரும் பதிந்துள்ள எனது அனைத்து ஆக்கங்களையும் உடனே நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எனது உரையைத் தேடி இந்தக் கேடு கெட்ட தளத்துக்குச் செல்பவர்கள் நபிகள் நாயகத்துக்கு எதிரான் நச்சுக்கருத்துக்களையும் பார்க்க நான் காரணமாக ஆக விரும்பவில்லை. இதனால் மிகச் சில அளவுக்கு யூ டியூபின் பார்வையாளர்கள் குறைவார்கள். இதை மற்றவர்களும் கடைப்பிடித்து இது உலக முஸ்லிம்களை சென்றடையும் என்று நம்ப்வுகிறேன். அப்போது யூடியூபுக்கு தக்க பாடமாக அமையும் என்று நான் கருதுகிறேன்.

மீண்டும் சொல்கிறேன். எனது கேள்வி பதில்கள் எனது உரைகள் எனது எழுத்துக்கள் எனது தளத்துக்கான லிங்குகள் உள்ளிட்ட எதுவும் யூடியூபில் இருக்க வேண்டாம். பதிவு செய்துள்ள அனைவரும் தாமதமின்றி அவற்றை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கூகுளுக்கும் ஜி மெயிலுக்கும் எதிராக நாம் எத்தகைய பதிலடி கொடுக்கலாம் என்பதை ஆலோசித்து தலைமை மூலம் விரைவில் தக்க முடிவை அறிவுக்குமாறு மாநில நிர்வாகிகளுக்கு கோரிக்கை வைத்துளேன். இன்ஷா அல்லாஹ்

ஆர்ப்பாட்டங்களால் அளிக்கும் பதிலடியை விட பார்வையாளர்களைக் குறைத்து விளம்பர வருவாயைக் குறைப்பது இந்தக் கயவர்களுக்கு மிகப் பெரிய பதிலடியாக அமையும்.

பீஜே அல்லது ஜைனுல் ஆபிதீன் என்று தேடினால் யூடியூபில் எதுவும் இல்லாமல் இருக்க அனைவரும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger