Home » » முஸ்லிம்களின் மத உணர்வுகளை பாதித்திருக்கும் பிரசுரத்திற்கு தினக்குரல் பத்திரிகை வருந்துகிறது

முஸ்லிம்களின் மத உணர்வுகளை பாதித்திருக்கும் பிரசுரத்திற்கு தினக்குரல் பத்திரிகை வருந்துகிறது

Written By STR Rahasiyam on Thursday, September 27, 2012 | 11:21 PM




இஸ்லாத்தையும் அதன் போதகர் நபிகள் (ஸல்) அவர்களையும் அவமதிக்கும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள திரைப்படத்தின் காட்சிகளின் புகைப்படங்களை 22.09.2012 சனிக்கிழமை அன்று வெளியாகிய தினக்குரல் பத்திரிகையின் ‘புதிய பண்பாடு’ பகுதியில் பிரசுரித்தமைக்காக இஸ்லாமிய சகோதரர்களிடம் மிகுந்த வருத்தத்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.என்று அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது
தினக்குரல் பத்திரிகையின் இப் பிரசுரமானது இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் விசனத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருந்தம் குறிப்பிடத்தக்கது
ஊடகங்கள் பக்கச்சார்பின்றி நடுநிலைமையுடன் ஊடக தர்மத்திற்கமைவாக செயற்படவேண்டும். எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் இடம்பெறும் நிகழ்வுகளை எத்தகைய ஊடகமும் பிரசுரம், ஒலி மற்றும் ஒளிபரப்புவது கண்டிக்கத்தக்கதாகும்.
மூவின மக்களும் புரிந்துணர்வுடன் வாழ்கின்ற இந்நாட்டில், மிகப் பொறுப்புடன் அவரவர் மத உணர்வுகளையும் கலாசாரங்களையும் பேணும் வகையில் செயற்படுவது ஊடகங்களின் கடப்பாடாகும்.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger