Home » » சம்மாந்துறையில் அரச திணைக்களங்களின் நடமாடும் சேவைக்கான ஏற்பாடு

சம்மாந்துறையில் அரச திணைக்களங்களின் நடமாடும் சேவைக்கான ஏற்பாடு

Written By STR Rahasiyam on Saturday, July 7, 2012 | 6:22 PM


சனிக்கிழமை, 07 ஜூலை 2012 TM NEWS

தேசத்துக்கு மகுடம்' திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் சகல திணைக்களங்களினதும் பங்களிப்புடன் பாரிய நடமாடும்சேவைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதனை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேசத்தின் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தோறும் நீண்ட காலமாக தீர்க்ப்படாதுள்ள பிரச்சினைகளை இனங்கானும் வகையிலான முன்னோடி நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந் நடமாடும் சேவையில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் உட்பட பிரதேச செயலகத்தின் சகல பிரிவுகளினதும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

சம்மாந்துறை பிரதேசத்தை நான்கு பிரிவுகளாக பிரித்து நடைபெறும் இந்நடமாடும் சேவையில் இன்றைய தினம்  விளினையடி - 1,2,3. மலையடிக்கிராமம் - 1,2,3,4. புளக் ஜே கிழக்கு -1,2,3. கல்லரிச்சல் -1,2,3 புளக் ஜே மேற்கு - 1, 2 ஆகிய பிரிவுகளுக்கு நடைபெறுகின்றது.

எதிர்வரும் 12ஆம் திகதி சம்மாந்துறை – 1,2,3,4,5,6,7,8 தமிழ் பிரிவு – 1,2,3,4, மட்டக்களப்புத்தரவை – 1,2 ஆகிய பிரிவுகளுக்கு சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்திலும். 

எதிர்வரும் 14ஆம் திகதி சம்மாந்துறை – 9,10,11,12, கருவாட்டுக்கல் - 1,2,3, வீரமுனை –1,2,3,4. ஆகிய பிரிவுகளுக்கு வீரமுனை ஆர்.கே.எம்.வித்தியாலயத்திலும்.

எதிர்வரும் 17ஆம் திகதி உடங்கா – 1,2 சேந்நெல் கிராமம் - 1,2 மல்வத்தை – 1,2,3,4. வளத்தாப்பிட்டி – 1,2 மல்கம் பிட்டி ஆகிய பிரிவுகளுக்கு சம்மாந்துறை பிரதேசத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger