Home » » இரண்டு கிளைகளுடனான வாழை மரம்! இலங்கையில் அதிசயம் (படங்கள் இணைப்பு)

இரண்டு கிளைகளுடனான வாழை மரம்! இலங்கையில் அதிசயம் (படங்கள் இணைப்பு)

Written By STR Rahasiyam on Saturday, September 15, 2012 | 9:29 AM








மனிதர் மற்றும் விலங்குகளில் விதி விலக்கான அபூர்வமான விடயங்கள் நடப்பது போல் தாவரங்களிலும் அபூர்வமான விடயங்கள் நடக்கின்றன.
ஒரு வித்திலை தாவரமான வாழை ஒரு மரம் மாத்திரமே வளரும்இ ஆனால் இந்த வாழை மரம் இரண்டு கிளைகளுடன் வளர்ந்திருக்கும் அதிசயமான நிகழ்வூ ஒன்று நுவரெலியா தலவாக்கலை பகுதியில் நடந்துள்ளது.
தலவாக்கலை சென் கிளாயர் தோட்டத்தில் வசிக்கும் திருமதி ஜோதிமலர் என்பவரின் வீட்டில் வளர்ந்த வாழை மரம் ஆரம்பத்தில் ஏனைய மரங்களை போல் வளர்ந்து வந்தாலும் இடையில் இரண்டு கிளைகளாக வளர்ந்துள்ளன.
ஆரம்பத்தில் இதை சாதாரண விடயமாக இவர்கள் கண்டுக்கொள்ளாத போதிலும் மரம் பெரிதாக வளரும் பொழுது இதன் வித்தியாசம் தெரிய வந்துள்ளது.
இதனை பார்வையிட அயலவர்கள் வருகை தருவது போல் அயல் பாடசாலை மாணவர்களும் வருகை தருவதாக வீட்டில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
கால மாற்றத்தில் ஏற்படுகின்ற விசித்தரங்களாக இவை மக்களை வியப்பில் ஆழ்த்துகின்றன.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger