Home » » சவூதி அரேபியாவில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்

சவூதி அரேபியாவில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்

Written By STR Rahasiyam on Saturday, September 15, 2012 | 2:32 AM


JM
இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக மதிக்கும் அண்ணல் நபிகள் நாயகத்தையும் இழிவாக சித்தரித்து படம் எடுத்தவனுக்கும், குர்ஆனை எரித்ததோடு மட்டுமின்றி இந்த படத்தையும் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியையும் ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் சார்பாக ரியாதில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

14-09-12 வெள்ளிக்கிழமையன்று இரவு 8.30 மணிக்கு துவங்கிய இக்கூட்டத்தில் முதலாவதாக சகோ.அலாவுதீன் அவர்கள், மீடியாக்கள் பாரபட்மாக நடப்பதாகவும் அவை முஸ்லிம்களை அவமதிப்பதை தனது குறிக்கோளாகவே கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்ததாக சகோ.முஹம்மது மாஹீன் கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில் ‘அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து முஸ்லிம்களை சீண்டி வருவதாகவும்இ முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
 
அமெரிக்காவில் ஆட்சியை பிடிப்பதற்காக ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் யூத சியோனிச லாபிகளுக்கு அடிபணிந்து உலகின் அமைதியை கெடுத்து வருவதாகவும் கூறினார்.
 
உலக முஸ்லிம்கள் அனைவரும் கொந்தளிக்கும் வகையில் ஒரு அயோக்கியத்தனத்தை செய்தவர்களை கண்டிக்க துப்பில்லாமல் யூ டியூபிலுள்ள வீடியோவை நீக்க முடியாது, அது தனிநபர் சுதந்திரத்தை பறிப்பதாகும்’ என்ற ஹிலாரி கிளிண்டனின் கோமாளித்தனமான பேட்டியை அவர் வன்மையாக கண்டித்தார். ஒருவன் செய்த அயோக்கியத்தனத்தால் உலக முஸ்லிம்கள் அனைவரின் மனமும் புண்படுவதும் அதன் மூலம் உலகில் குழப்பங்கள் ஏற்படுவதையும் பற்றிய கவலையின்றி ஆணவமான இந்த பதில் மேலும் முஸ்லிம்களை கோபப்படுத்தி இருக்கின்றது. தனது மதத்தின் சிறப்பினை எடுத்துக் கூறலாமே தவிர பிற மதத்தை பழித்துக் கூற எந்த சட்டமும் அனுமதிக்கவில்லை.
 
பிற மதங்களை இழிவாக பேசக்கூடாது என இஸ்லாம் தடுத்திருப்பதாலும் இயேசுவை இறைத்தூதர் என்று இஸ்லாம் கண்ணியப்படுத்துவதாலும் முஸ்லிம்கள் பிற மதத்தை பற்றி குறை கூறுவதில்லை. முஸ்லிம்கள் அமைதியாக இருப்பதால் கோழைகள் என நினைத்துவிட வேண்டாம்.
 
உலகெங்கும் நடத்தப்படும் இந்த கண்டன போராட்டங்களை கண்ட பிறகாவது அமெரிக்கா நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து, முஸ்லிம்கள் தங்களது உயிரைவிட மேலாக கருதும் மாமனிதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது களங்கம் கற்பித்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். படம் எடுத்தவனையும் அதை பரப்பியவனையும் தண்டிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

இறுதியாக ரியாத் மண்டல தலைவர் பைஸல் முஹம்மது அவர்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சனிக்கிழமையன்று சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் தலைநகரங்களில் டி.என்.டி.ஜே சார்பாக போராட்டம் நடைபெற இருப்பதையும் குறிப்பிட்டார்.
 
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger