கொழும்பில் திடீரெனப் பெருமளவு தெருநாய்கள் மர்மமான முறையில் காணாமற்போயுள்ள நிலையில், கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளதை காவல்துறையும், பிராணிகள் நல அமைப்புகளும் உறுதி செய்துள்ளன. கொழும்பு விகாரமாதேவி பூங்கா பகுதியில் காணப்பட்ட 10 வரையிலான தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளன.
இந்தநிலையில், கொழும்பிலுள்ள இறைச்சிக் கடைக்காரர் ஒருவர், ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவதை உறுதி செய்துள்ளார்.
அதேவேளை, சிகாவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெருநாய்கள் காணாமற் போனது தொடர்பாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தெருநாய்கள் காணாமற் போனது பற்றி நாம் அறிவோம். ஆனால் அவற்றுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
கடந்தவாரம் தெருநாய்களைப் பிடித்து வாகனம் ஒன்றில் ஏற்றி கொலன்னாவ நோக்கி கொண்டு சென்றதை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
nanri jm ,tw
0 comments:
Post a Comment