Home » » பட்டாசு கொளுத்தி மகிழலாமா?

பட்டாசு கொளுத்தி மகிழலாமா?

Written By STR Rahasiyam on Friday, August 17, 2012 | 3:18 PM


பட்டாசுகள் வெடிப்பொருட்களில் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாதவை என்று எதுவும் இல்லை. அனைத்து பட்டாசுகளும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.
சிறிய பட்டாசைக் கொளுத்தினாலும் அதிலிருந்து வெளிவரும் நச்சுப்புகை சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றது. மனிதர்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள பிராண வாயுவில் கலந்து பல்வேறு நோய்களை உருவாக்குகின்றது. சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் இதனால் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
குடிசைகளில் பட்டாசு விழுந்து குடிசைகளைக் கொளுத்தி மனிதர்களையும் கொல்கிறது. இதய நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் படிக்கும் மாணவர்களுக்கும் பலவிதமான கேடுகளை ஏற்படுத்துகின்றது.
ஒரு முஸ்லிம் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
11 حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيُّ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْإِسْلَامِ أَفْضَلُ قَالَ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ رواه البخاري
அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
மக்கள், "இஸ்லாத்தில் சிறந்தது எதுஅல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்அவரது செயலே சிறந்தது)'' என்று பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி 11
2518حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي مُرَاوِحٍ عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ قَالَ إِيمَانٌ بِاللَّهِ وَجِهَادٌ فِي سَبِيلِهِ قُلْتُ فَأَيُّ الرِّقَابِ أَفْضَلُ قَالَ أَعْلَاهَا ثَمَنًا وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا قُلْتُ فَإِنْ لَمْ أَفْعَلْ قَالَ تُعِينُ ضَايِعًا أَوْ تَصْنَعُ لِأَخْرَقَ قَالَ فَإِنْ لَمْ أَفْعَلْ قَالَ تَدَعُ النَّاسَ مِنْ الشَّرِّ فَإِنَّهَا صَدَقَةٌ تَصَدَّقُ بِهَا عَلَى نَفْسِكَ رواه البخاري
அபூதர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கüடம், "எந்த நற்செயல் சிறந்தது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் (போராடு வதும்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.  நான், "எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது'' என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், "அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும்  (தான் சிறந்தவர்கள்)'' என்று பதிலளித்தார்கள்.  நான், "என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?'' என்று கேட்டேன்.  நபி (ஸல்) அவர்கள், "பலவீனருக்கு உதவி செய்அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்'' என்று கூறினார்கள்.  நான், "இதுவும் என்னால் இயலவில்லையென்றால்....?" என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், "மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில்அதுவும் நீ உனக்குச் செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்'' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 2518
பட்டாசு கொளுத்துவதை சுற்றுலாச் செல்வது போன்று கருத முடியாது. சுற்றுலாச் செல்வதால் யாருக்கும் எந்த்த் தீங்கும் ஏற்படாது. ஆனால் பட்டாசு கொளுத்துவதால் மேலே நாம் சுட்டிக்காட்டிய தீங்குகள் நிச்சயம் ஏற்படுகின்றன.  
எனவே பட்டாசுக்காக நாம் செலவிடும் தொகை வீணானது.  இதைப் பயன்படுத்துவதால் பிறருக்குத் தீங்கு செய்த குற்றத்துடன் பொருளாதாரத்தை விரையமாக்கிய குற்றமும் ஏற்படும்.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger