Home »
» சவூதி அரேபியாவில் பெண்களுக்கு என தனியான நகரம்
சவூதி அரேபியாவில் பெண்களுக்கு என தனியான நகரம்
Written By STR Rahasiyam on Monday, August 13, 2012 | 5:59 AM
சவுதி அரேபியாவில் பெண்களுக்கான தனி நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இளம் பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு, தற்போது பெண்களுக்கான தனி நகரை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த நகரை உருவாக்கும் பணிகள் அடுத்த ஆண்டு துவங்க உள்ளன. இந்த புதிய நகரில் பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
சவுதியில், தற்போது வெளிநாட்டுப் பெண்கள் தான் அதிக அளவில் வேலை செய்கின்றனர். புதிய நகரம் உருவாகும் பட்சத்தில், உள்ளூர் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் அதிக பங்களிப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
0 comments:
Post a Comment