மியான்மர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு, 250 கோடி ரூபாய் (இந்திய மதிப்பு) பெறுமானமுள்ள உதவிகளை சவுதி அரேபியா அரசு வழங்க உள்ளது.
கடந்த ஜூன் மாதம், முஸ்லிம்களின் குடிசைகளை, தீ வைத்து கொளுத்தி விட்டதாகக் கூறி, பெரிய அளவில் கலவரம் மூண்டது. பாதுகாப்பு கருதி, ஏராளமான முஸ்லிம்கள், தங்கள் தாயகமான வங்கதேசத்துக்குள் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
மியான்மரில் உள்ள முஸ்லிம்கள் அந்நாட்டு ராணுவத்தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதை, இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கண்டித்துள்ளன. இதற்கிடையே இந்த மாநாட்டின் உறுப்பினரான சவுதி அரேபியா, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் முஸ்லிம்களுக்கு, 250 கோடி ரூபாய் பெறுமானமுள்ள உதவிகளை அறிவித்துள்ளது. இந்த நிவாரணப் பொருட்களை உடனடியாக மியான்மருக்கு அனுப்ப, சவுதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.
நன்றி ஜே எம்
0 comments:
Post a Comment