ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் இம்மார்க்க சொற்பொழிவு மாலை 06.00 மணிக்கு சகோதரர் அப்துல் ஜப்பார் தலைமையில் ஆரம்பமனது. தலைமையுரையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் குறித்து தெளிவானதொரு அறிமுகத்தை வழங்கினார். அத்தோடு மஃரிப் தொழுகைக்காக நேரம் வழங்கப்பட்டது.
அடுத்த அமர்வு மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து துவங்கியது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர் ஸப்வான் DISc ‘இது தான் இஸ்லாம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். சமுதாயத்தில் இஸ்லாம் என்று தவறாக சித்தரிக்கப்படுபவற்றை இணங்காட்டி உண்மையான இஸ்லாம் எது என்பதையும் வஹியின் பிரகாரம் தான் எமது வாழ்க்கை அமையவேண்டும் என்பன போன்ற முக்கிய தகவலகளை மையமாகக் கொண்டு தமது உரையை நிகழ்த்தினார்.
இறுதியாக ‘இஸ்லாமும் நமது ஊரும்’ எனும் தலைப்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய துணைத் தலைவர் சகோதரர் பர்ஸான் அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சி எதற்காக கூட்டப்பட்டதோ அதற்கான முழு வடிவமே இவ்வுரையில்
அடங்கியிருந்தது. அவ்வூரில் நடைபெறும் ஒழுக்கேடான காரியங்களையும் குடும்பங்களில் ஏற்படுகின்றது சீரழிவுகளையும் சீதனம் போன்ற சமூகக் கொடுமைகளையும் சுட்டிக்காட்டி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சிறந்ததோர் ஊரை உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சி சரியாக இரவு 10.00 மணிக்கு நிறைவுற்றது. மக்கள் பெரும் திரலாக கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:
Post a Comment