Home » » வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா?

வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா?

Written By STR Rahasiyam on Sunday, October 7, 2012 | 11:21 AM

ஆணோ பெண்ணோ பருவ வயதை அடைந்து விட்டால் அவர்கள் திருமணம் செய்யலாம். தன்னை விட வயது குறைவான பெண்ணைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று மார்க்கத்தில் சட்டம் இல்லை.

ஆனால் அதன் சாதக பாதகங்களை அறிந்து கொள்ளாமல் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து விட்டு பின்னர் கவலைப்படக் கூடாது.

பெண்களின் தாம்பத்தியம் அவர்களின் மாதவிடாய் நிற்கும் வரை தான். அதன் பின்னர் அவர்களுக்கு அதில் போதுமான நாட்டம் இருக்காது. ஆனால் ஆண்களுக்கு மாதவிடாய் போன்ற பிரச்சனை இல்லாத்தால் அவர்கள் திடகாத்திரமாக இருந்தால் எழுபது எண்பது வயது வரை தாம்பத்தியத்தில் ஈடுபட இயலும். 


25 வயது வாலிபன் 25 வயதுப் பெண்ணை அல்லது முப்பது வயதுப் பெண்ணை திருமணம் செய்தால் அந்தப் பெண்ணுக்கு 45 வயதில் மாதவிடாய் நின்று விடும் போது அந்த ஆணுக்கு 45 அல்லது நாற்பது வயது ஆக இருக்கும். இந்த வயது தாம்பத்தியத்தை அதிகம் நாடக் கூடிய வயதாகும். பெண்ணால் தாம்பத்திய சுகம் கொடுக்க முடியாத்தால் இவன் தவறான பாதையில் செல்லும் நிலை ஏற்படும். 

தேவை ஏற்பட்டால் கணவன் இன்னொரு திருமணம் செய்வதை அனுமதிக்கும் பெண்கள் அரபு நாடுகளில் உள்ளனர். ஆனால் இந்தியாவில் தன்னால் கணவனுக்கு சுகம் கொடுக்க முடியாவிட்டாலும் அவன் இன்னொரு திருமணம் செய்வதை பெண்கள் ஒப்புக் கொள்வதில்லை. இதனால் அவளை விவாகரத்து செய்யும் நிலை ஏற்படும். அல்லது கள்ளத்தனமான உறவுகள் மூலம் சுகம் அனுபவிக்கும் நிலை ஏற்படும். இதைப் பற்றியும் ஆலோசித்துக் கொண்டு மூத்த வயதுப் பெண்ணைத் திருமணம் செய்வது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.

இதைக் கவனத்தில் கொண்டு தான் ஆணை விட பெண்ணுக்கு ஐந்து அல்லது ஆறு வயது குறைவாக இருக்கும் வகையில் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது.

பெண்கள் 15 முதல் 18 வயதுக்கு உள்ளேயும், ஆண்கள் 20 முதல் 25 வயதுக்கு உள்ளேயும் திருமணம் செய்தால் இருவருக்கும் சமகாலத்தில் தாம்பத்திய ஆசை குறைவதால் பிரச்சணைகள் வராமல் இருக்கும்.

மேலும் தள்ளாத வயதை அடைந்து விட்ட பெண்களுக்கு துணையாக கணவன் இல்லா விட்டாலும் பெண்களை மற்ற பெண்கள் நல்ல படி கவனித்துக் கொள்வார்கள். ஆனால் மனைவியை இழந்த கணவன் தள்ளாத வயதை அடைந்து விட்டால் அவனை யாரும் கவனிக்க மாட்டார்கள். ஏனெனில் பெண்களிடம் தான் கவனித்துக் கொள்ளும் தன்மை இயல்பாகவே உள்ளது. படுக்கையில் மலஜலம் கழிக்கும் முதிய வயது ஆணை எந்த ஆணும் கவனிக்க மாட்டார்கள். பெண்களாலும் கவனிக்க இயலாமல் போகும். ஆனால் பெண்களின் நிலை இவ்வாறு இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் எப்படியும் கவனித்துக் கொள்வார்கள்.

மரணம் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் முதுமை அடைந்து மரணிப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். 

இந்த நிலையில் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால் கணவனை விட மனைவி சீக்கிரம் மரணிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் தள்ளாத வயதில் அவன் தனித்து விடப்படும் நிலை ஏற்படும். ஆனால் தன்னை விட குறைந்த வயதுப் பெண்ணைத் திருமணம் செய்தால் மனைவிக்கு முன்னர் கணவன் மரணிக்கும் வாய்ப்புகள் அதிகம். மனைவியின் கவனிப்பு இருக்கும் போது மரணிக்கும் வாய்ப்பு இருக்கும். 

இது போன்ற சாதக பாதகங்களையும் கவனத்தில் கொண்டு முடிவு செய்வது நல்லது.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger