Home » » எய்ட்ஸை ஒழிக்க இஸ்லாம் காட்டும் வழி ?

எய்ட்ஸை ஒழிக்க இஸ்லாம் காட்டும் வழி ?

Written By STR Rahasiyam on Sunday, October 7, 2012 | 11:29 AM

இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டு முஸ்லிம்கள் அனைவரும் கடைப்பிடித்து ஒழுகக் கூடிய சுன்னத் எனும் விருத்த சேதனம் எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கும் என்று அவ்வப்போது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு வருகின்றது. 

தற்போது ஒரு நாட்டின் எம்பிக்கள் எய்ட்ஸை ஒழிக்க உதவும் விருத்த சேதனத்தை ஊக்குவிப்பதற்காக தாங்கள் விருத்த சேதனம் செய்யப்போவதாக முடி செய்துள்ளனர். இது குறித்து தினமலர் நாளேடு 

22/5/2012 பின்வரும் செய்தியை வெளியிட்டுள்ளது,

லண்டன்: எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு முன்னோடியாக, ஜிம்பாப்வே நாட்டு எம்.பி.,க்கள், 170 பேர் "சுன்னத்' செய்து கொள்ள முன்வந்துள்ளனர். 

ஒழுக்கக் குறைபாட்டின் காரணமாக, ஆப்ரிக்க நாடுகளில், எய்ட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க, கடந்த 2010ம் ஆண்டு முதல், தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுன்னத் செய்து கொள்வதால், எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு குறைவு என்பதால், ஆப்ரிக்க தலைவர்கள் பலர், சுன்னத் செய்து கொண்டுள்ளனர். ஜிம்பாப்வே நாட்டில், முஸ்லிம் அல்லாத இளைஞர்களும், "சுன்னத்' செய்து கொள்கின்றனர். ஜிம்பாப்வே நாட்டு பார்லிமென்டில், கடந்த வாரம், எய்ட்ஸ் தடுப்பு குறித்த பிரசார கருத்தரங்கு நடந்தது. இதில் பேசிய எம்.பி., ஒருவர், பெண்கள் அழகாக இருப்பதால், அவர்கள் மீது ஆண்களுக்கு ஆசை வருகிறது. எனவே, பெண்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும். இதன் மூலம், எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கலாம்' என்றார். இதற்கு, பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


எய்ட்ஸ் நோய் தடுப்பு விஷயத்தில், எம்.பி.,க்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என, தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 170 எம்.பி.,க்கள், "சுன்னத்' செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர். பெண் எம்.பி.,க்கள், தங்கள் கணவருக்கு சுன்னத் செய்ய வற்புறுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுள்ளனர். முஸ்லிம் மத பெரியவர்களை கொண்டு, இந்த சடங்கு செய்வதற்கு பதில், மருத்துவர்களை கொண்டு, "சுன்னத்' செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.

அல்குர்ஆன் 61 : 9 
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger