2012 டிசம்பர் 21 ம் தேதி உலகம் அழியும் என்று நாஸா (NASA) வின்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக கூறி பலரும் ஒரு குறுந் தகவலை (SMS) பரப்பி வருகின்றார்கள்.
உண்மையில் டிசம்பர் 21ல் உலகம் அழியுமா? உலகம் அழியும் நாளை விஞ்ஞானிகளினால் எதிர்வு கூற முடியுமா? போன்ற கேள்விகளுக்கான பதிலை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த வருடம் டிசம்பர் 21ல் உலகம் அழியும் என்பது தொடர்பில் ஏராளமான கதைகள் தற்போது சொல்லப்பட்டு வருகின்றன. இதற்கான அடிப்படை காரணம் பண்டைய மாயன் காலண்டரின் நாட்காட்டி சரியாக 2012 டிசம்பர் 21ல் முடிவடைகின்றது. மாயன் காலண்டரை நம்பக் கூடியவர்கள்தாம் டிசம்பர் 21ல் உலகம் அழியும் என்ற தகவலை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு எத்தனிக்கிறார்கள்.
டிசம்பர் 21ல் உலகம் அழியும் என்ற மாயன் காலண்டரின் மௌட்டீகக் கொள்கையை நிலை நாட்டுவதற்கு எத்தனிக்கும் கும்பல் 2012 என்ற தலைப்பில் கட்டுக் கதைகளை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்தையும் அண்மையில் வெளியிட்டமை குறிப்பிடத் தக்கது.
நாஸா (NASA) ஆய்வு மையம் ஏற்றுக் கொண்டதா?
இது பற்றி நாஸா (NASA) விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கையில் 2012 இல் புவிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது எனவும், இந்த புவி இன்னும் 4 பில்லியன் வருடங்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி இருக்கும் என்றும் கூறியுள்ளது. (நாஸா ஆய்வு மையம் கூட இதை கூற முடியாது என்பதே குர்ஆனில் இருந்து நாம் தெரிய வேண்டிய விஷயமாகும்)
முஸ்லிம்களாகிய நாம் இது பற்றிய அறிவு அல்லாஹ்விடத்தில் மட்டும் தான் இருக்கின்றது என்று நம்ப வேண்டும்.
அந்த நேரம் எப்போது வரும் என்று உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர் இது பற்றிய ஞானம்! ஏன் இறைவனிடமே உள்ளது. அதற்குறிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. (7:187)
அந்த நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர் அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது? அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது? அதை அஞ்சுவொருக்கு நீர் எச்சரிப்பவரே! (79:42-54)
இன்னும் பார்க்க 6:31, 12:107, 16:77, 20:15, 22:55, 31:34, 33:63, 41:47, 43:85
வதந்தி பரப்புபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்.
2012 டிசம்பர் 21ல் உலகம் அழியும் என்ற பொய்யான தகவலை மக்கள் மத்தியில் குறுஞ் செய்தி மூலமாகவோ, இணைய தளங்கள் மூலமாகவோ பரப்பி தேவையற்ற பயத்தை மக்கள் உள்ளங்களில் பதியச் செய்பவர்கள் அல்லாஹ்வின் தண்டனை அஞ்சிக் கொள்ள வேண்டும்.
வதந்தியை நம்புபவர், அதைப் பரப்புபவர் பற்றி நபி (ஸல்) அவர்களின் தெளிவான தீர்ப்பைப் பாருங்கள்.
ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: (முஸ்லிம் – 06)
ஆதாரமில்லாத, வதந்தியான, இட்டுக்கட்டப்பட்ட செய்தியை பரப்புபவர்களுக்கு நரகத்தில் கொடுக்கப்படுத் தண்டனை பற்றி நபி(ஸல்) அவர்கள் கண்ட ஒரு கணவில் விளக்கப்படுகின்றது. அதில் நபியவர்கள் நரகத்தின் அகோரக் காட்சிகள் பலவற்றைக் காண்கின்றார்கள்.அதில் கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றியும், தண்டனைக்குறியவர்கள் பற்றியும் மலக்குமார்களிடம் விசாரிக்கிறார்கள்.
அப்போது வதந்திகளை பரப்புபவனுக்கு கிடைக்கும் தண்டனை பற்றி தெரிவிக்கப்பட்டதை பாருங்கள்.
அப்படியே நாங்கள் சென்று மல்லாந்து படுத்திருந்த ஒரு மனிதரை அடைந்தோம். அவரது தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒரு பக்கமாகச் சென்று கொக்கியால் அவரது முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரது மூக்குத் துவாரத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். -அல்லது பிளந்தார்.- பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆகிவிடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான்இ அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்? என்று கேட்டேன்.
அதற்கு அந்த வானவர்கள் அந்த மனிதன் அதிகாலையில் தமது வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும். (புகாரி – 7047)
(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
எனவே ஊகத்தின் அடிப்படையில் செய்தியை பரப்பி நாம் அல்லாஹ்வின் முன்னிலையில் பொய்யனாகலாமா?
rasminmisc.com
0 comments:
Post a Comment