டுபாயில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த தம்பதியர் அவர்களின் குடும்ப நண்பரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். குறித்த தம்பதியர் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டு எழுந்து சென்ற தமது கணவரை பிறிதொருவர் தாக்குவதை தாம் கண்டதாக இலங்கை பெண் தெரிவித்துள்ளார்.
பின்னர் குடும்ப நண்பராக கருதப்படும் சந்தேகத்திற்குரியவர் தம்மையும் தாக்குவதற்கு துரத்தியதாகவும், ஆடையில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் தமது கழுத்தில் கீறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரால் தமது கணவர் தலையிலும், கைகளில் கடுமையாக தாக்கப்பட்டு கிடந்ததாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து தடுக்கப் போன தன்னை கத்தியால் குத்துவதற்கு துரத்திக்கொண்டு வந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். தன்னை வீதிவரை துரத்திவந்த சந்தேக நபரை 4 அரேபியர்கள் மடக்கிப்பிடித்து பொலிஸில் ஒப்படைத்ததாகவும் அவர் கூறினார்.
தாக்குதலுக்கு உள்ளான இலங்கை தம்பதியர் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த தம்பதியர் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் டுபாய்க்கு சென்று தங்கியுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் மற்றைய பகுதியில் தங்குவதற்கு பிறிதொரு தரப்பினர் கோரியிருந்தனர்.
எனினும், குறித்த தம்பதியர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, மதுபோதையில் வந்த இருவர் தமது கணவரை அச்சுறுத்திவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்திருந்தார். AD + TM
0 comments:
Post a Comment