tn+jm
நூற்றுக்கணக்கானோரை பலிகொண்ட சார்ஸ் வைரஸ் போன்ற ஒரு சுவாச நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பிரிட்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த புதிய வைரஸ் குறித்து சர்வதேச சுகாதார அமைப்பு who எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும் சர்வதேச பயணக் கட்டப்பாடுகளை அந்த அமைப்பு பரிந்துரைக்கவில்லை.
அண்மையில் சவூதி அரேபியாவுக்கு பயணம் செய்த 49 வயது ஆண் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ளது. இவர் கட்டாரில் இருந்து சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த வைரஸ் தொற்றிய ஒருவர் சவூதியில் மரணமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் வைரஸின் அபாயத் தன்மை குறித்து உத்தியோக பூர்வமாக எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை. இந்த நோய் குறித்த ஆய்வு ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருப்பதாகவும் சர்வதேச சுகாதார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இது தொற்றக்கூடியது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ள டபிள்யூ. எச். ஒ. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் இடையில் எந்த தொடர்புகளும் இருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. முன்னர் கடந்த 2003 ம் ஆண்டு சர்வதேச அளவில் பாதிப்பை செலுத்திய சார்ஸ் வைரஸால் 30 நாடுகளில் 800 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment