துருக்கியின் கருங்கடல் பகுதியருகே கடலில் மிதந்துவந்த பெண்பொம்மையால் பரபரப்பு ஏற்பட்டது. துருக்கியில் கருங்கடலையொட்டி சாம்சன் மாகாணம் உள்ளது. இங்குள்ள கடல் பகுதியில் பெண்ணின் உருவம் ஒன்று மிதந்துவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாம்சன் மாகாணம் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும், சர்வதேச கப்பல் போக்குவரத்தில் முக்கிய ஸ்தலமாகவும் உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமையன்று பெண்ணின் உருவம் ஒன்று கடலில் மிதந்துவருவதைக் கண்ணுற்ற பொதுமக்கள் உடனடியாகக் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.
காவல்துறையினரும் உடனடியாக மீட்புப் படையினரை அனுப்பி வைத்தனர். கடலில் குதித்த மீட்புப்படையினர் அந்த உருவத்தை நெருங்கிப் பார்த்த போது, அது பெண் உருவில் இருந்த காற்றடிக்கப்பட்ட பொம்மை என்று தெரியவந்தது. சுற்றுலாப் பயணிகள் யாரேனும் அந்தப் பொம்மையை கடலில் வீசியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment