SLTJWEB
இன்றைய நவீன காலத்தில் மனிதனுடன் பிரிக்க முடியாத அளவிற்கு இரண்டறக் கலந்துள்ள ஓர் அற்புதமான அறிவியில் கண்டு பிடிப்பு தொலைக் காட்சியாகும். அறிவியில் கண்டு பிடிப்புகளில் எதுவாக இருந்தாலும் அவற்றில் மனிதர்களுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடியவைகளும் தீமையை ஏற்படுத்தக் கூடியவைகளும் இருக்கின்றன.
புதிது புதிதாக நவீன சாதனங்களை மனிதன் கண்டு பிடிக்கும் போது அவற்றையல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையா? தடுக்கப்பட்டவையா? அல்லது எந்த அளவிற்கு இதைப் பயன்படுத்துவதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது. என்பதை நாம் சற்று நிதானமாக ஆய்வு செய்து அதற்கேற்ப அதைப் பயன்படுத்தி இம்மை மறுமை நற்பேறுகளைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
தொலைக் காட்சி உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மனிதர்கள் இவ்வுலகத்தில் அடைந்திருக்கக் கூடிய நன்மைகள் ஏராளம் இதன் மூலம் இறைவனின் ஆற்றல்களையும் வல்லமைகளையும் இதையெல்லாம் மனிதன் கண்டுபிடிப்பதற்கு அவனுக்கு மேல் ஒரு சக்தி இருக்கின்றது என்பதையும் இன்னும் சாமானிய மக்கள் இந்த அறிவியல் ஆராய்ச்சிகளை அறிந்து பயன்படுத்துவதற்கும் இந்தத் தொலைக் காட்சி அற்புதமான அறியதோர் வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
அல்லாஹ் தன்னைப் பற்றிச் சொல்லும் போது வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 3:190
இவைகளை எல்லாம் சிந்திக்கும் போது இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் அவனுடைய தகுதியையும் அந்தஸ்தையும் உணர்ந்து கொள்ள முடியும். அது போன்று இறைவன் இருக்கிறான் என்பதை சாதாரண பாமர மக்கள் அறிந்து கொள்ளும் அளவிற்கு இந்த தொலைக்காட்சி முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது.
எழுத்தறிவோ படிப்பறிவோ இல்லாத பள்ளிக்கூடத்திற்குச் சென்று ஒன்றிரண்டு வகுப்புக்கள் கூட படிக்காத சாதாரண மனிதர்கள் கூட விண் வெளியின் இயக்கங்களைப் பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. இது போன்று பறவைகள் விலங்கினங்கள் இன்னும் உலகில் இது போன்ற எண்ணற்ற இறைவனின் படைப்புக்கள், அவற்றின் உணவுப் பழக்க வழக்கங்களைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கிறது.
மருத்துத்துவம், அறிவியல் படைப்புக்கள், இன்னும் ஏராளமான புதிய கண்டு பிடிப்புக்களையும் அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக இந்தத் தொலைக் காட்சி உறுதுணையாக இருக்கிறது.
இதற்கும் மேல் இந்தியாவின் தென்பகுதியில் வாழும் முஸ்-ம்கள் மத்தியில் ஏகத்துவ எழுச்சியும் வளர்ச்சியும் ஏற்பட்டிருப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தத் தொலைக் காட்சி முக்கியமான ஒரு காரணமாக இருக்கின்றது.
இந்த அளவிற்கு மனித சமுதாயத்திற்கும் அதிலும் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்திற்கு எண்ணற்ற பல நன்மைகளை இந்தத் தொலைக் காட்சி கொண்டு வந்திருக்கிறது. என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்கவே முடியாது.
ஆனால் ஏராளமான பயனுள்ள தொலைக்காட்சி சேனல்களில் மிருகங்கள், அறிவியல் ஆராய்ச்சி, வானம் பூமி மனிதனின் வாழ்வாதாரம், மனிதர்களுக்கு விளக்கம் சொல்லுகிற ஏராளமான சேனல்கள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் எதைப்பார்க்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பார்த்தால், அறிவு சார்ந்த தொலைக்காட்சி சேனல்களை எல்லாம் ஒதுக்கி வைத்தும் புரட்சிகரமான கருத்துக்கள், விஞ்ஞானம் சார்ந்த கருத்துக்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டும் அதற்கு அப்பால் இருக்கும் காமக் களியாட்டங்களையும் வீண் விளையாட்டுக்களையும் பிறரைப்பற்றி விமர்சிக்கும் மோசமான திரைப்படங்களையும், அருவருப்பான காட்சிகளையும், ஆடல் பாடல் கொண்டாட்டங்களையும், மிகவும் அருவருப்பான இரண்டு துணிகளில் காட்சியளிப்பவைகளையும் தான் பெரும்பாலான மக்களும் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தவர்களும் இதைப் பார்த்து ரசித்து அதில் மூழ்கி அடிமையாகிக் கொண்டிருக்கிற ஒரு வேதனையான சூழ்நிலையை நம்முடையை சமுதாயத்தில் பார்க்க முடிகிறது.
நாம் அன்றாடம் நமக்கு அருகாமையில் இருக்கும் எத்தனையோ பேர்களைப் பார்த்திருப்போம் அதிலும் குறிப்பாக மதுவிற்கு அடிமையானவர்களைப் பார்த்திருப்போம்.
மதுவைக் குடித்துக் குடித்து உடலில் போதை மருந்துகளை ஏற்றி அந்த போதைக்கு முற்றிலும் அடிமையாகிப் போய் தன்னை மறந்து, தன்னுடைய மனைவி மக்களை மறந்து, அக்கம் பக்கத்தையும் சுற்றத்தாரையும் உறவினர்களையும் தான் வகிக்கின்ற பதவியையும் பட்டத்தையும் கௌரவத்தையும் மறந்து ஏதோ சந்தனக் குட்டையில் தத்தளிப்பது போன்று சக்கடையில் மூழ்கித் தத்தளிக்கும் மதுவிற்கு அடிமையாகி அவர்கள் தொலைத்ததைப் போன்று எண்ணற்ற இழப்புக்களை இந்த சமுதாயம் தொலைக் காட்சியின் மூலம் கௌரவத்தையும் அறிவையும் தொலைத்து விட்டு நிற்கிறது. இது போன்று இந்த சமுதாயம் தொலைக்காட்சியின் மூலம் இழந்துள்ள இழப்புக்கள் எண்ணிலடங்காதவையாக இருக்கின்றன.
பல வருடங்களுக்கு முன்னர் கோயமுத்தூரில் தொலைக்காட்சியினால் நடந்த ஒரு பரிதாபகரமான நிகழ்வு இந்த சமுதாயம் எந்த அளவிற்கு மார்க்க ரீதியாகவும் அறிவியில் ரீதியாவும் தன்னுடைய கௌரவத்தை இழந்துள்ளது என்பதை நமக்கு பாடம் புகட்டுகிறது.
கோயமுத்தூரில் இரவு எட்டு மணிக்கு ஒரு சின்னத்திரை தொடர் ஒலிளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது தாயுடைய மடியில் அமர்ந்திருந்த குழந்தை பாதாள சாக்கடையில் சங்கமாகி உயிரை மாய்த்துக் கொண்ட வரலாற்றை யாராலும் மறக்கவே முடியாது.
வீட்டில் அனைவருக்கும் தங்களுடைய அனைத்து எண்ணோட்டங்களையும் அந்த சீரிய-ல் கவனம் செலுத்தி உச்சகட்டத்திற்குச் சென்று கண்கள் எல்லாம் குளமாகி கதறிக் கொண்டிருந்தார்கள் அந்த சீரியலைப் பார்த்து பெரும்பாலான பெண்கள் தங்களின் நிஜ வாழ்க்கையில் நடக்கும் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கும் தன்னுடைய பெற்றோர்கள், கணவன்மார்கள், பிள்ளைகள், மாமன்மார்கள் எல்லாம் ஒரு வேளை உணவிற்கு வழியில்லாமல் பிச்சையடுத்துக் கொண்டிருப்பார்கள். உழைப்பதற்கு வழியில்லாமல் மிகவும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பார்கள் அவர்களைப் பற்றியெல்லாம் நினைத்து ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தாத நமது தாய்க்குலங்கள் தொலைக்காட்சிகளைத் திறந்து
வைத்துக் கொண்டு அதில் இடம் பெறும் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு கண்ணீர் விடுகிறார்கள் இவர்கள் தமது பணத்தை வாரி இறைத்துக் கொண்டு கண்ணீர் விடுகிறார்கள்.
அக்காட்சிகளைக் பார்த்துக் கண்ணீர் விட்டு இரண்டறக்கலந்து பார்த்துக் கொண்டிருந்த போது அவளுடைய மடியில் வைத்திருந்த சின்னஞ்சிறு தவழுகிற பருவத்தில் இருந்த குழந்தை இக்கட்டத்தில் அவளுடைய மடியை விட்டு இறங்கிச் செல்கிறது. கீழே இறங்கிச் செல்லும் குழந்தையை தாய் கவனிக்கவில்லை. குழந்தை மடியை விட்டு இறங்கி இங்குதான் இருக்கப் போகிறது என்ற எண்ணத்தில் தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்து சீரியலைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் தாய். பச்சிளம் குழந்தை அப்படியே தவழ்ந்து தவழ்ந்து வாச-ல் தெருவிற்கு வந்து விட்டது. வாசல் படியைக் கடந்தால் இரு புறத்திலும் பெரும் பாதள சாக்கடை. பால் வடியும் முகத்தையுடைய அறியாப் பருவத்துக் குழந்தை, தான் எங்கே கால் வைக்கிறேன் என்று அறியாக் குழந்தை அந்தப் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து சாக்கடையுடன் சங்கமிக்கிறது. இங்கே தாய் சீரியலைப்பார்த்து பரவசம் அடைந்து கொண்டிருக்கும் போது குழந்தை மரணத்தின் விழும்பை அடைந்து விட்டது.
சீரியல் முடிந்த பிறகு குழந்தையைக் காணவில்லை உன்னிடம் தானே இருந்தது? அவளிடம் தானே இருந்தது? என்று வீட்டிலும் வீட்டை சுற்றியுள்ள அக்கம் பக்கத்து வீடுகளிலும் தேடுகிறார்கள். அங்கும் குழந்தை கிடைக்கவில்லையென்றதும் தெருவல்லாம் குழந்தையைத் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை கடைசியாக காவல் நிலையத்தில் சென்று அங்கும் குழந்தையைக் காணவில்லை என்று முறையீடும் செய்யப்பட்டு விட்டது.
கடைசியில் மறுநாள் காலையில் அந்த இடத்தில் இருந்த பாதாள சாக்கடையில் அந்தப் பச்சிளம் பாலகனுடைய உடல் ஊதிப் பெரிதாகி சாக்கடைக்கு மேல் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்த அத்தனை பேர்களும் ஆகா நம்முடைய குழந்தையை நாம் கவனக் குறைவாக இருந்ததால் இழந்து விட்டோமே என்று கண்ணீர் விட்டுக் கதறி அழுத ஒரு வேதனை நிறைந்த உள்ளத்தை உலுக்கும் ஒரு மோசமான நிகழ்வைக் காண முடிந்தது.
நம்முடைய சமுதாயம் எதையெல்லாம் தொலைக்கிறது என்பதைப் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பத்து மாதம் கஷ்டப்பட்டு எண்ணிலடங்கா துயரங்களுடன் பெற்றெடுத்த தன்னுடைய பச்சிளங்குழந்தையை தொலைக்காட்சித் தொடரில் மூழ்கி அதற்கு அடிமையாகிப் போய்
அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாத காரணத்தினால் ஏராளமான இழப்புகளை இந்த சமுதாயம் இழந்து நிற்கிறது.
தொலைக் காட்சியினால் ஏற்பட்ட விபரீதங்களைப் பற்றி வெளி வந்த செய்திகள் ஒன்றிரண்டுதான். வெளி வராத செய்திகள் ஏராளமாக காணப்படுகின்றன.
சீரழிந்த கலாச்சாரம்
இந்தத் தொலைக்காட்சி, சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டபிறகு உலக அளவிலும் இந்த சமுதாய அளவிலும் ஏற்பட்டிருக்கிற மாற்றங் களைப் பார்க்கிற போது உலகம் இத்தனை ஆண்டுகளாக கட்டிக் காத்து வந்த அருமையான நாகரீகங்களும் அற்புதமான பண்பாட்டுக் கலாச்சாரங்களும் சீர்குலைக்கப்பட்டு சின்னாபின்னப்படுத்தப்பட்டிருப்பதை மறக்க முடியாது.
உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்திற்கு விட்டுச் சென்ற ஏராளமான நாகரீக வாழ்க்கையும் ஏராளமான நற்பெயர்களும் அவைக அனைத்தையும் இந்த சமுதாயம் தொலைக்காட்சியில் தொலைத்து விட்டு நிற்கிறது என்பதை நிகழ்கால தொலைக்காட்சியைப் பார்க்கிற ஆண்களையும் பெண்களையும் இளைஞர்களையும் குழந்தைகளையும் ஆய்வு செய்து பார்க்கும் போது இஸ்லாத்தின் தூய்மையான கலாச்சாரங்களையும் நற்பண்புகளையும்
அற்புதமான நபி (ஸல்) அவர்களின் போதனைகளையெல்லாம் இந்த சமுதாயம் தொலைக்காட்சியில் தொலைத்திருக்கின்றது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் ஒரு போதனையைச் சொல்லுகிறான். மிகவும் அற்புதமான போதனையும் இந்தப் போதனையை கடைப்பிடிக்காத காரணத்தினால் உலகில் கலாச்சாரம் இன்று சீரழிந்து சின்னாபின்னமாகிக் காணப்படுகிறது. இன்று எய்ட்ஸ் என்ற கொடுமையான நோய்க்கு ஆளாகி பல்வேறு பெண்களிடத்திலும் தாறுமாறாகச் சென்று பாலி-யல் இன்பத்திற்கு ஓர் வரையறை இல்லாமல் கிடைத்த இடங்களில் எல்லாம் மிருகங்களைப் போன்று அனுபவித்து விட வேண்டும் என்ற பாலி-யல் வேட்கையின் காரணமாகவும் பாலி-ய-லின் மீதுள்ள மோகத்தின் காரணமாகவும் தவறுகளில் ஈடுபட்டு கடைசியில் எச்.ஐ.வி கிருமிகள் தொற்றி எய்ட்ஸ் நோய்க்கு மருந்தில்லை என்று கூறி எண்ணற்ற உயிர்கள் இன்று வரையும் பலி-யாகிக் கொண்டிருக்கின்றனஇந்தக் கொடிய நோய்க்குரிய முதல் காரணமாக விபச்சாரத்தைப் பற்றி திருமறைக் குர்ஆன் கூறுகிறது.
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
அல்குர்ஆன் 17:32
இன்றைக்கு இந்த போதனை இந்த சமுதாயத்தில் பேணப்படுகிறதா? விபச்சாரத்தை செய்யாதே என்று சொல்லுவதை விட விபச்சாரத்தை செய்ய தூண்டும் காரியத்திற்கு அருகாமையில் கூட நீங்கள் சென்று விடாதீர்கள், அதில் கண்ணும் கருத்துமாக இருங்கள் என்று சொல்லி- திருமறைக் குர்ஆன் இந்த சமுதாயத்திற்கு போதனை செய்கிறதே அந்த ஒரு போதனை இந்தத் தொலைக் காட்சி தொடர்களினாலும் திரைக் காவியங்களினாலும் நாம் பார்க்கும் ஆடல்பாடல்களினாலும் கூத்துக் கும்மாளங்களினாலும் அல்லாஹ்வின் இந்த போதனை தூக்கி எறியப்பட்டிருக்கின்றது என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
நபி (ஸல்) அவர்கள் எவை எல்லாம் விபச்சாரத்தின் பக்கம் நெருக்கி வைக்கும் தீமைகள் என்பதைப் பட்டிய-லிடும் போது மனிதன் எதில் எல்லாம் தன்னையறியாமல் தவறிழைப்பானோ எந்தத் தீமைகளில் இரண்டறக் கலந்து விடுவார்களோ அவைகளை ஒவ்வொன்றாகச் சொல்லி- மக்களே இது உங்களைத் தீமையின் பால் சேர்த்து விடும் இது விபச்சாரத்தின் பால் உங்களை தள்ளிவிடும் எனவே இவைகளை விட்டும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்)
அவர்கள் சொல்லி-த் தருகின்றார்கள்.
விபச்சாரத்திற்குரிய முதலாவது காரணம் தனிமை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்த ஆணும் ஒரு பெண்ணிடம் தனிமையில் இருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான்
ஆதாரம்: திர்மிதீ 1091
நபி (ஸல்) அவர்கள் யாரையும் குறை சொல்லவில்லை என்றைக்கும் எந்த மனிதனும் தன்னை தவறு செய்தவன் என்று சொல்லவே மட்டான் அது போன்று செய்த தவறை ஒப்புக் கொள்ளவும் மாட்டான். சில சமயங்களில் விபத்துக்கள் ஏற்பட்டால் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்று கேட்டால் எதிரில் வந்தவன் வந்து மோதி விட்டான் என்று எதிரில் வந்தவனைத் தான் குறை சொல்வானே தவிர நான் தான் முட்டி விட்டேன் என்று என்றைக்கும் எந்த மனிதனும் தன்னுடைய தவறை நியாயப்படுத்துவானே தவிர அதனை ஏற்றுக் கொள்ள மாட்டான். யார் தான் தவறு செய்தவர்கள் என்று பார்க்கும் போது உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் நான் தவறு செய்யவில்லை என்று சொல்லுவது ஒரு வழக்கமாகவே இருக்கிறது.
ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் போது அவர்களுடன் வழிகெடுக்கும் ஷைத்தான் இருக்கின்ற காரணத்தினால் அவன் மனிதனை மிக இலகுவாக வழிகெடுத்து விடுவான் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் நமக்கு பின்வரும் போதனையின் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்.
அறிவிப்பவர் : ஸஃபிய்யா (ரலி-) ஆதாரம் புகாரி 2038
ஷைத்தானைப் பொறுத்தவரையில் அவனுக்கு மனிதனை வழிகெடுப்பதற்கு ஒரு வினாடி போதுமானதாக இருக்கிறது. ஒரு நேரமில்லையென்றாலும் இன்னொரு நேரத்தில் அந்தக் கொடிய விபச்சாரத்தில் தள்ளிவிடுவான். அவர்கள் எவ்வளவு பெரிய இறைநேசர்களாக இருந்தாலும் சரியே என்பதற்கு திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் கூறும் இறைத் தூதரின் வாழ்க்கை நமக்கு போதுமானதாக இருக்கிறது.
அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் அழகிய வரலாற்றுக்குச் சொந்தக்காரரான யூசுப் (அலை) அவர்களின் வரலாற்றைச் சொல்லும் போது எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து “வா!’ என்றாள்.
அல்குர்ஆன் 12:23
தனிமை உருவாகி விட்டது. யூசுப் (அலை) அவர்களும் அந்தப் பெண்ணும் மாத்திரம் தனிமையாக இருந்தார்கள். அந்தப் பெண் தன்னுடைய தவறான இச்சைக்கு கட்டுப்படுமாறு அழைக்கிறாள்.
அல்லாஹ் அதை வர்ணிக்கும் போது அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திரா விட்டால் (தவறியிருப்பார்)
அல்குர்ஆன் 12:24
தனிமையில் ஒருவரை அழகான பெண் வயப்படுத்தும் போது யாராக இருந்தாலும் சலனம் ஏற்படத்தான் செய்யும். அது போல் யூஸுஃப் நபிக்கும் ஏற்பட்டது. அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டதால்
அவர்கள் உடனடியாக சுதாரித்துக் கொண்டு விலகி விடுகிறார்கள். இறைவனால் பாதுகாக்கப்படக் கூடியவர்கள் அப்படிப்பட்ட இறைவனின் தூதராக இருந்தாலும் சரி தனிமை நிச்சயமாக விபச்சாரத்தின் பால் கொண்டு போய் சேர்த்து விடும். அல்லாஹ்வின் நாட்டத்தினால் காப்பாற்றப்பட்டிருக்கிறார் சாதாரண மனிதனாக இருந்திருந்தால் அவரும் அன்றைக்கு தவறிழைத்திருப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கவே செய்யும். எனவே நீங்கள் விபச்சாரத்தின் பால் தள்ளிவிடக் கூடிய தனிமையை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
0 comments:
Post a Comment