டெஹ்ரான்:புதிய கல்வியாண்டில் பெண்களுக்கு அணுசக்தி இயற்பியல், கணினி விஞ்ஞானம், ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட எண்பது பாடங்களை கற்பதற்கு தடைவிதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த தடை ஈரானின் 30க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் அமலுக்கு வந்துள்ளது.
மத்திய கிழக்கில் பெண்களுக்கு பல்கலைக்கழக கல்வி உள்பட பல்வேறு உரிமைகளை முதன்முதலாக வழங்கிய நாடான ஈரான் அரசு ஏன் இந்த முடிவை மேற்கொண்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான காரணங்களை கூறவில்லை.
ஈரான் அரசின் நடவடிக்கைக்கு நோபல் பரிசுப் பெற்ற அந்நாட்டைச்சார்ந்த பெண்மணி ஷெரின் இபாதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment