சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சொறிக்கல்முனை பாலணா வெளி கண்டத்தின் வயற்காணி ஒன்றிலுள்ள சூட்டுக் களவெட்டியில் வைக்கோல் போட்டு எரிக்கப்பட்டு உருக்குலைந்த நிலையில் இளம் பெண் ஒருவரின் உடல்பாகங்கள் சில சம்மாந்துறைப் பொலிஸாரினால் இன்று (15) பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை சம்மாந்துறைப் பொலிஸாருக்க கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இத்தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த சடலம் எரிக்கப்பட்ட இடத்தில் கூரிய கத்தி ஒன்று கைப்பிடி எரிந்த நிலையில் காணமப்பட்டுள்ளதுடன் உடற்பாகங்கள் அவ்விடத்தில் எரிந்துள்ளதுடன் சில பாகங்கள் சில நாய் போன்ற மிருகங்களால் இழுத்துச் செல்லப்பட்டு சற்று துரத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சம்பவ இடத்துக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதிவான் ஏ.எச்.எம். அறூஸ், அம்பாறை பொது வைத்திய சாலையின் சட்ட மருத்தவ அதிகாரி திரு செனவிரெத்தின, அம்பாறைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அதிதியட்சகர் திரு விஜேசேகர, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, பொருங் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.எம்.இப்றாஹீம், அப்பிரதேச கிராம உத்தியோகத்தர் கே.மதன் உற்பட சொக்கோ புலனாய்வு உத்தியோகத்தர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.
இதே சமயம் கடந்த மூன்று வாரகாலமாக நற்பிட்டிமுனை சட்டம்பியார் வீதியில் வசிக்கும் முகம்மதலி முஜிதா என்பவர் காணமற்போனதாக அவ்விடத்தில் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டதுடன் குறித்த நபருடைய குடும்ப உறுப்பினர்கள் சிலரும் அவ்விடத்தக்கு வருகை தந்திருந்தனர்.
இச்சடலத்தின் சில பாகங்கள் பரிதேனைக்காக டுத்துச்செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment