நேற்று 07.08.2012 அன்று பாராளுமன்ற கூட்டத் தொடரில் உரையாற்றிய அஸ்வர் எம்.பி தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கும் போது நமது பாராளுமன்ற உரிமை ஊது குழலாக மாறிப் போயுள்ளதை காண முடிகின்றது.
ஆளும் அரசாங்கத்தின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் எந்தவொரு பள்ளியும் உடைக்கப்படவில்லையாம். அனைவரும் நிம்மதியாகவும் சுபீட்சமாகவும் வாழ்கின்றார்களாம்.
இதோ அஸ்வர் தெரிவித்த (வீரகேசரி பத்திரிகை வெளியிட்ட) கருத்துக்களைப் பாருங்கள்.
யாரோ கல்லை ௭றிந்துவிட்டு குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் நாட்டிலுள்ள ௭ந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு சகலமத சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது ௭ன்பதை சவால்விட்டுக் கூறுகிறேன் ௭ன்று ஆளும் கட்சி ௭ம்.பி.யான ஏ.௭ச்.௭ம். அஸ்வர் நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காடு பேணல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மன்னார் மாவட்டத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மீனவர்கள் மீண்டும் தமது வீடுகளுக்கு செல்ல முற்படுகையில் அங்கு அவர்களுக்கு சொந்தமான இடங்களைக் கொடுக்காது மீண்டும் விரட்டுவது கொடுமையானதாகும்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைக் கேட்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மன்னார் மீனவர்களுக்காக இந்த பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியுமா ௭ன சவால் விடுக்கிறேன். மன்னார் முஸ்லிம் மீனவர்களின் நிலைமையினை நோக்குகையில் அன்னமிட்ட வீட்டில் கன்ன மிட்ட பாவிகள் மண்ணாகப் போவார்களே ௭ன்ற பாடலே ஞாபகத்தில் வருகிறது. இங்கு முஸ்லிம்களுக்கு ௭திராக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பாரிய சதியொன்று அரங்கேற்றப்படுகின்றது. அதன் ஒரு அங்கமாகவே மன்னார் வழக்கின்போது இடம்பெற்ற சம்பவமாகும். இந்த சதியில் நீதி வழங்க வேண்டியவர்களும் பங்குதாரர்களாக உள்ளனர்.
முஸ்லிம்களுக்கு ௭திரான சதி தொடர்பிலும் அதனுடன் தொடர்புபட்டிருப்பவர்கள் தொடர்பிலும் அரசு அறிந்து வைத்துள்ளது. யாரோ கல்லை ௭றிந்து விட்டு குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் இந்நாட்டில் ௭ந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு அனைத்து மத உரிமைகளும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளன ௭ன்றார்.
இவ்வாறு பாராளுமன்றத்தில் அஸ்வர் பேசியுள்ளார்.
ஜனாதிபதில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் நாட்டைப் பீடித்திருந்த தீவிரவாத விடுதலைப் புலிகளின் அராஜகம் இல்லாமல் ஆக்கப்பட்டதை நாங்களும் வரவேற்கின்றோம். ஆனால் இன்று ஆயுதத் தீவிரவாதம் இல்லாமலாக்கப்பட்டு பள்ளிகளை குறி வைக்கும் பேரினவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதை அஸ்வர் அவர்கள் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல் மறைக்க முற்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
தம்புள்ள பள்ளியில் ஆரம்பித்து ராஜகிரிய பள்ளி வரையுள்ள அனைத்துப் பிரச்சினைகளும் யாருடைய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டவை? இப்போது இலங்கையில் ஆளும் ஜனாதிபதியாக இருப்பவர் யார்? ஆட்சியாளர்களின் ஊது குழலாக இருக்கிறோம் என்பதற்கு இவ்வளவு ஆழமாக அஸ்வர் ஒத்து ஊதுவார் என்பது இப்போதுதான் தெரிகின்றது.
தம்புள்ளை, குருனாகல, தெஹிவலை என்று ஆரம்பித்த முஸ்லிம் விரோதப் போக்கு இன்று பல்பாரிணாமம் பெற்று வியாபித்து வருவது அஸ்வர் அவர்களுக்குத் தெரியவில்லையா என்ன?தம்பகம மஸ்ஜிதுல் அர்க்கம் ஜூம்ஆ பள்ளிவாசல் முற்றவெளியில் பிரித் ஓதி தொழுகையை இடை நிறுத்துமாறு பிக்குமார்கள் நடாத்திய அராஜகம், கொழும்பு – 07 எம்.எச்.எம்.அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலையும் அதனை அண்டிவாழும் குடும்பங்களையும் இடம்பெயரச் செய்து விட்டு அவ்விடத்தில் ரஷ்ய தூதுவராலயத்தின் 4 மாடி கட்டடத்தை நிர்மாணிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை, ராஜகிரிய கிரிடா மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் தொழுகையை தடுப்பதற்கு பிக்குமார்கள் ஒன்று திரண்டமை,கிண்ணியா பாலத்திற்கு அருகில் முஸ்லிம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வரவேற்பு கோபுர நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளமை, திருகோணமலை மாவட்ட அநுராதபுர எல்லைக்கிராமமான ரொட்டவௌ பகுதியில் பரம்பரை பரம்பரையாக செய்து வரப்பட்ட சேனைப் பயிர்ச்செய்கை காணியும் விவசாயக் காணியும் வனவள அதிகாரிகளினால் பரிமுதல் செய்யப்பட்டு வருகின்றமை, மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்களுக்குரிய கோந்தப்பிட்டி துறியனையை விடத்தல் தீவு கிறிஸ்தவ மீனவர்களுக்குரியதாக நீதிபதியினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை,மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் நொச்சிக்குளத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது அவர்களுக்கெதிராய் ஆர்ப்பாட்டம் செய்தமை, சன்னாரி பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது அவர்களது காணிகளை கொடுக்காததோடு வேறு இடத்திலும் காணிகளை வழங்கக் கூடாது என்று மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியமை, புதுக்குடியிருப்புக்கும் எருக்கலம்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் 200 முஸ்லிம்களுக்கு சொந்தமான 1500 ஏக்கர் காணியினை தனியொரு தமிழருக்கு வழங்கியமை, எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போல்‘தம்புள்ளை புனித புமி பிரச்சினைக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தீர்வு கிடைக்காவிட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும்’ என்று அஸ்கிரிய மகாநாயக்க உடுகம ஸ்ரீபுத்தரக்கித்த தேரர் விடுத்துள்ள மிரட்டல், ‘இன்று எமக்குள்ள பிரச்சினை தமிழ் பயங்கரவாதமல்ல! இஸ்லாமிய தீவிரவாதமே! இதற்காக ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டும்’ என்று இனவாதத்தை கக்கியவண்ணம் களமிறங்கியுள்ள பௌத்த செயல் முன்னணியின் சூடு பரக்கும் அறிக்கை, தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கெதிராய் கிளர்ந்தெழச் செய்யும் விதத்தில் ‘கல்முனைக்குச் செல்லும் தமிழ் பெண்கள் முஸ்லிம் வியாபாhpகளிடம் இலவசமாக பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள்… முஸ்லிம்கள் தன்னினப் பெண்களை அடக்குமுறையில் வைத்து விட்டு எமது தமிழ் பெண்கள் மீது சுகம் கொள்கின்றார்கள்’ என்ற வரிகளுடன் மட்டக்களப்பில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் செயல்பாடுகள் அனைத்தும் யாருடைய ஆட்சியில் நடக்கின்றது?
அஸ்வர் எம்.பி இலங்கையில் இருக்கிறாரா? அல்லது வேறு எங்கும் வசிக்கிறாரா? அரசாங்கத்தை பாதுகாக்க்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு கொடுமைகள் நடந்தும் அதை மூடி மறைக்க முற்படும் அரசியில் சாணக்கியம் அஸ்வர் எம்.பி யைத் தவிர வேறு யாருக்கும் இருக்குமா என்று எண்ணத் தலைப்படுகின்றோம்.
மன்னார் மாவட்டத்தில் முஸ்லீம்களின் வாக்குகளைக் கேட்க்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மன்னார் மீனவர்களுக்காக இந்த பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியுமா ௭ன சவால் விடுக்கிறேன். என்று குறிப்பிட்ட உரையில் அஸ்வர் கூறியிருக்கிறார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு குரல் கொடுக்க முடியுமா? அது தேவைதானா? என்பதைப் பற்றி இரண்டாவது யோசிப்போம். முதலில் அஸ்வர் அவர்கள் இணைந்திருக்கும் ஆளும் அரசாங்கம் அந்த மக்களுக்காக என்ன செய்தது? என்பதை அஸ்வர் தெளிவுபடுத்துவாரா?
எது எப்படியோ கிழக்குத் தேர்தலில் முஸ்லீம்களின் வாக்குகளை மீண்டும் அரசுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அஸ்வர் போன்றவர்கள் இதையும் பேசுவார்கள் இதற்கு மேலும் பேசுவார்கள்.
எழும்பில்லா நாக்கல்லவா? எதையும் பேசும்
நன்றி -றஸ்மின் misc.com
0 comments:
Post a Comment