அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் குறித்து அரசு புலனாய்வுத்துறை ஏஜன்சியான எஃப்.பி.ஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.
ராணுவத்தில் போராளிகள் நுழைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவ்விசாரணை நடைபெறுவதாக நேசனல் பப்ளிக் ரேடியோ தெரிவித்துள்ளது.
2009-ஆம் ஆண்டு டெக்ஸாசில் உள்ள ராணுவ தளத்தில் ராணுவ வீரன் நடத்திய தாக்குதலின் பின்னணியில் இவ்விசாரணை நடைபெறுவதாக அச்செய்தி கூறுகிறது.
ஆனால், இச்செய்திக்குறித்து பதிலளிக்க பெண்டகன் வட்டாரங்கள் மறுத்துவிட்டன. பிரதிநிதி சபை மற்றும் செனட்டின் ஒருங்கிணைந்த குழு முன்பாக எஃப்.பி.ஐ. இவ்விசாரணைக் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment