இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு பற்றிய இறுதி அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விபரங்களும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இருந்தபோதும் இலங்கையில் வாழும் பல்லின சமூகங்களின் எண்ணிக்கையோ அல்லது மத ரீதியிலான விபரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.
சனத்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் போது மதம், இனம் மொழி பற்றிய விபரங்களுமே சேகரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இலங்கையில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அவர்கள் இலங்கையின் சனத்தொகையில் இரண்டாமிடத்தை அடைந்திருப்பதாகவும் உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்வாறனதொரு நிலையில் அரசாங்கம் முஸ்லிம்களின் உள்ளிட்ட எந்தவொரு சமூக, சமய பிரிவினரினதும் எண்ணிக்கையை வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
1960,1970, 1980ஆம் ஆண்டுகளில் இலங்கையில் முஸ்லிம்களின் சனத் தொகை 8 சதவீதம் என்று முழுப்புள்ளி விபரங்களும் தெரிவித்ததோடு பாடசாலைகளிலும் போதிக்கப்பட்டு வந்தது இன்று அரசாங்க மற்றும் புள்ளிவிபரங்கள் சார்ந்த இணையத்தளங்களைப்பார்த்தால் அதில் 7.5 சதவீத மென்றே அரசாங்கம் கூறுகின்றது. எப்படி இந்தக்குறைவு ? முஸ்லிம்களின் உண்மையான சனத்தொகை விகிதாசாரத்தை பகிரங்கப்படுத்தினால் அந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் தொழில், பல்கழைக்கழக அனுமதி மற்றும் சேவைகளை செய்ய வேண்டும். குறைத்துக்காட்டினால் அதை சிங்கள வர்களுக்கு கொடுக்க முடியும் என்பதனால்தான். அதனால் எமது பச்சோந்தி முஸ்லிம் அரசியல் வாதிகள் இதை அரசாங்கத்தின் கவனத்துக்கு எடுத்து வந்தால் நல்லது.
ReplyDeleteungalathu karuththukku nanri.........
ReplyDelete