பதில்
பெண்களின் தலை மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும். பெண்கள் தலையை முழுமையாக மறைக்க வேண்டும்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
அல்குர்ஆன் (24 : 31)
முக்காடுகள் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் குர்ஆனில் கும்ரு என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. கிமார் என்பது இதன் ஒருமைச் சொல்லாகும். கிமார் என்றால் தலையை மறைக்கும் துணி என்பது இதன் சரியான பொருள். இவ்வாறே அரபு அகராதி நூற்களிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது.
அல்முஃஜமுல் வசீத் மற்றும் லிசானுல் அரப் ஆகிய அகராதி நூற்களில் பெண்களின் கிமார் என்பது அவர்கள் தங்களுடைய தலையை மறைத்துக் கொள்ளும் துணிக்கு சொல்லப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட வசனம் பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்று கூறுகின்றது. பெண்களின் தலைப் பகுதி மறைக்கப்பட வேண்டியது என்று நபிமொழிகளும் கூறுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
மாதவிடாய் (ஏற்படும் பருமடைந்த) பெண்ணின் தொழுகையை முக்காடுடன் (அவள் தொழுதாலே) தவிர அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
அபூதாவுத் 546
3582 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا أَبُو جُمَيْعٍ سَالِمُ بْنُ دِينَارٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى فَاطِمَةَ بِعَبْدٍ كَانَ قَدْ وَهَبَهُ لَهَا قَالَ وَعَلَى فَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ثَوْبٌ إِذَا قَنَّعَتْ بِهِ رَأْسَهَا لَمْ يَبْلُغْ رِجْلَيْهَا وَإِذَا غَطَّتْ بِهِ رِجْلَيْهَا لَمْ يَبْلُغْ رَأْسَهَا فَلَمَّا رَأَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَلْقَى قَالَ إِنَّهُ لَيْسَ عَلَيْكِ بَأْسٌ إِنَّمَا هُوَ أَبُوكِ وَغُلَامُكِ رواه أبو داود
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு ஒரு அடிமையை அன்பளிப்புச் செய்திருந்தார்கள். அந்த அடிமையுடன் அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் அணிந்திருந்த ஒரு ஆடையால் தன் தலையை மூடிய போது அவர்களின் கால்களுக்கு அது போதவில்லை. கால்களை அவர்கள் மறைத்த போது தலைக்குப் போதவில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்ட போது (ஃபாத்திமாவே தற்போது உனது தலை அல்லது கால்களை மறைக்கா விட்டால்) உன் மீது எந்தக் குற்றமும் ஏற்படாது. ஏனென்றால் (உனக்கு முன்னால்) உனது தந்தையும் உனது அடிமையும் (மட்டுமே) உள்ளனர் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்
நூல் : அபூதாவுத் 3582
பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்று ஃபாத்திமா (ரலி) அவர்கள் புரிந்திருந்த காரணத்தினால் அவ்வாறு மறைக்கின்றார்கள். தந்தைக்கு முன்னால் பர்தாவுடைய சட்டத்தைக் கடைபிடிக்கத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணர்த்துகிறார்கள்.
எனவே அந்நியர்களுக்கு முன்னால் பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்பதை நபியவர்களின் இந்தச் சொல்லிலிருந்து அறியலாம்.
பதில் வழங்கியவா்-PJ
இந்த செய்தியை இங்கே Facebook , Twitter மூலம் பகிர்ந் மார்க்க பணிக்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment