வவுனியாவில் பிறந்து ஐந்து நாட்களேயான சிசுவொன்று புதைக்கப்பட்டு, 15 நிமிடங்களின் பின்னர் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சிசுவை புதைத்த குற்றச்சாட்டில் 29 வயதான தாய், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் அயலவர்களினால் குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சிசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்படி பெண்ணின் கணவர் யுத்தத்தில் உயிரிழந்த நிலையில், அவரது பெற்றோரின் பாதுகாப்பில் அவரும், அவரது நான்கு வயது மகளும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த பெண் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ள நிலையிலேயே குறித்த சிசுவுக்கு தாயாகியுள்ளார்.
இந்நிலையிலேயே அவரது வீட்டுத் தோட்டத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றுக்கு அருகில் சிசுவை புதைத்துள்ளார்.
இதனை கண்டுள்ள மேற்படி பெண்ணின் தாயார், அயலவர்களின் உதவியுடன் சிசுவை உயிரோடு மீட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஓமந்தை பொலிஸார், குறித்த சிசுவை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் மேற்படி பெண்ணைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ஓமந்தை பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிசுக்கொலை பற்றி அல் குர்ஆன்
இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!(6:137)
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்ற வர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை.(6:140)
'வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, 'நீங் கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது' என்பதே. பெற்றோருக்கு உதவுங் கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந் தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப் படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்(6:151)
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப் பட்டவனாக ஆகி விடுகிறான்(16:58)
அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெ னக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலி ருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.(16:59)
வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்(17:31)
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து 'அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்' என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (60:12)
என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது(81:8,9)
0 comments:
Post a Comment