Home » » உஹது போர்க்களம் புகைப்படங்களுடன்

உஹது போர்க்களம் புகைப்படங்களுடன்

Written By STR Rahasiyam on Sunday, October 14, 2012 | 3:51 PM

உஹது 
மக்கா குரைசிகளும் பிற கோத்திரத்தாரும் சேர்ந்து சுமார் மூவாயிரம் படையினர் மதினாவை தாக்குவதற்க்கு உஹது என்ற இடத்திற்க்கு வந்தனர். அப்துல்லா பின் சுபைர் ரளியல்லாஹு அன்ஹு தலைமையில் 50 வில்போர் வீரர்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் இந்த ஜபலுர் ருபாத்துக்கு உச்சியில் நிற்கவைத்தார்கள். மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் கட்டளை வரும்வரை இந்த குன்றிலிருந்து கீழே இறங்காமல் எதிரிகளை நோக்கி அம்பெய்தி கொண்டே இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். மதினாவிற்க்கு மிக அருகில் உள்ள உஹதில் 700 நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பார்களுடன் மிகக் கடுமையாக போரிட்டது இந்த பள்ளத்தாக்கில்தான் 

The valley of Uhd
Jabalur Rubath
ஜபலுர் ருபாத்


முஸ்லீம்களை எதிர்த்து போரிட எதிரிகளால் முடியவில்லை. தங்கள் தலைவர்களும் கொடியை தாங்க கூடியவர்களும் கொல்லப்பட்டதால் நிராகரிப்போர் போரிலிருந்து பின்வாங்கி சென்றனர். இதைக் கண்டதும் வில்போர் வீரர்களில் பத்து நபர்களை தவிர அனைவரும் பெருமானாரின் கட்டளையை புறக்கணித்து குன்றிலிருந்து இறங்கி எதிரிகள் விட்டுச்சென்ற ஆயுதங்களையும் பொருள்களையும் சேகரிக்க தொடங்கினார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காபிர்களின் குதிரைப்படையினர் குன்றின் பின்பக்கமாக மலைமீது ஏறி முஸ்லீம்களுக்கு எதிராக போரிட தொடங்கினார்கள். இதனால் ஏற்ப்பட்ட குழப்பத்தினால் ஆங்காங்கு சிதறி ஓடினார்கள். ஒரு சிலர் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டனர். இந்த சூழ்நிலையில் சிக்கி ஏராளமான முஸ்லீம் படையினர் வீரத்தியாகியாயினர்.

இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்; பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்; நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான் அல்குர்ஆன் 3:152

முஸ்லீம்கள் மீண்டும் வலிமைபெற்று மிக்க வீரத்துடன் முன்னேறிச் சென்று எதிரிகளை தாக்கியதால் அவர்கள் போர்களத்தை விட்டு ஓடிச்சென்றனர். உஹது போரில் தியாகிகளான சுமார் 60 ஷஹபாக்களின் கப்ருகள் இந்த சுற்று சுவருக்குள்தான் உள்ளன. அதற்க்கு நடுவில் உள்ளது பெருமானாரின் தந்தையின் சகோதரர் ஹம்ஸா பின் அப்துல்முத்தலிபின் கப்ரு ஆகும்.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger