Home » » “வியக்க வைத்த மனிதர்கள்” – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்

“வியக்க வைத்த மனிதர்கள்” – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்

Written By STR Rahasiyam on Saturday, September 22, 2012 | 1:51 PM


இலங்கை செய்தித் தளமொன்றில் வெளியான தகவல்
 
இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களிற்கும் எதிராக செயற்படும் அமெரிக்காவின் எம்பஸிக்கு  சென்று கண்டனம் தெரிவிப்பதும், மகஜர் கொடுப்பதும், தங்கள் அதிருப்தியை அவன் தரும் ஜுஸை பருகியவாறு வெளியிடுவதும் சிறுபிள்ளை தனமானது. வேடிக்கையானது. அமெரிக்கா இஸ்லாத்தின் பரம எதிரி என்பது தெளிவான விடயம். வேசைமடுவம் சென்று விபச்சாரியை சந்தித்து விபச்சாரத்திற்கு எதிரான எமது நிலைப்பாட்டை சொல்வது என்பது புரியாத போர்மூலா.. அமெரிக்க எம்பஸி நோக்கி நாம் அணிவகுப்பதில் தப்பில்லை…  அங்கு சென்று மகஜர் கொடுப்பது என்பது தப்பாகவே படுகிறது. 

நேற்றைய தினம் கொழும்பு புறக்கோட்டையில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட ஊர்வலம் புறக்கோட்டையில் ஆரம்பமாகி தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் கொம்பனிவீதி வழியாக காலி முகத்திடல் சுற்று வட்டத்தை வந்தடைந்தது. அதற்கு மேலும் அமெரிக்க உயர் ஸ்தானிகராலயத்தை நோக்கி செல்ல முற்பட்ட ஊர்வலத்தினரை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் எத்தனையோ நடந்துள்ளன. ஆனால் அவற்றில் எல்லாம் காணப்படாத ஒரு கட்டுப்பாடு, ஒரு ஒழுங்கு, தலைமைத்துவ ஒருங்கிணப்பு, பங்கு பற்றிய சகோதர சகோதரிகளின் பக்குவமான நடத்ததைகள், ரிமோட்டில் செயற்படுவது போன்ற கச்சிதமான வழிநடத்தல்கள் என எல்லாமே எல்லோருக்குமே வித்தியாசமானவையாக இருந்தன. அந்நிய மதத்தினரை வியக்க வைத்த ஒரு புதுமை ஆர்ப்பாட்டம் இது எனலாம். 

கோஷித்து, கும்மாளமிட்டு, குளறிகத்தி, திட்டிதீர்த்து இயல்பு நிலைகளை குழப்பி, எல்லோர் கவனத்தையும் தங்கள் பக்கம் திசை திருப்பும் எந்த ஒரு முயற்ச்சியும் இல்லாமல் வெற்றிகரமாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்துள்ளது. ஒரு மாற்று சமூக மூத்த ஊடக ஆய்வாளர் என்னுடன் தொடர்பு கொண்டு பேசும் போது “I am really surprised. Are they Sri Lnakan Muslims?, Can’t belive know”  என வியந்தது என்னை ஒரு சில கணம் புல்லரிக்க வைத்தது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தை “பீ.ஜே.யை பூஜை செய்யும் பக்தர்கள் என்றே நான் கூட எண்ணியிருந்தேன். மௌலவி அகார் முஹம்மத் ஒரு பயானில் சொன்ன “சண்டை கோழிகள்”எனும் சொல்லே எப்போதும் என் நினைவிற்கு எஸ்.எல்.டீ.ஜே. என்றவுடன் நினைவிற்கு வரும். இப்போது அவர்களிடம் கற்று கொள்ள நிறையவே இருக்கிறது எனபது போல ஒரு உண்ர்வு…
 இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். கரசேவகர்களின் ஒருங்கிணைப்புடன் நடாத்தப்படும் ஆர்பாட்டங்களை போல மிகவும் கவனமாகவும், மதிநுட்பத்துடனும் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினரின் இயக்க கட்டமைப்பையும், அவர்களது எதிர்கால வேகமான வளற்ச்சியையும் இப்போதே கணக்குக்கு போட வைக்கிறது.

இவற்றையும் தாண்டி சில எண்ணங்கள் மூளையை தடவி செல்கின்றன.

இந்த ஆர்ப்பாட்டம் சென்னையில் டீ.என்.டீ.ஜே. செய்த அதே பாணியில் ஒருங்கிணைக்கப்பட்ட சாயலும், கோஷித்த கோஷங்களின் வசனங்களின் வடிவங்களும், இவர்களிற்கும் அவர்களிற்கும் இடையிலான உறவுகளை துலாம்பரமாக கோடிட்டு காட்டுகிறது.

கலகமடக்கும் படையினர், முற்கம்பிகள், எஸ்.டீ.எப்பினர், டியர் கேஸ் சார்ஜிங் யுனிட் போன்ற எந்த ஏற்பாடுகளும் வெகுவாக காணப்படாத நிலையில் “வோட்டர் கனன்” எனும் தண்ணீர் பாய்ச்சி தாக்கும் ட்ரக்கினை தவிர ஏனைய எந்த முன்னேற்பாடுகளையும் அரசு செய்யாமல் இருந்ததில் இருந்து இந்த ஆர்ப்பாட்டம் பற்றி அரசிற்கு முன் கூட்டி சொல்லப்பட்டதா? அல்லது அரசின் உளவுப்பிரிவினர் இவர்களின் திட்டமிடலை அறிந்திருந்தனரா எனும் கேள்விகளும் எழுகின்றன.

V.I.P. ஜங்சன் என போக்குவரத்து பிரிவினரால் குறிக்கப்படும் கொள்ளுபிட்டி சந்தி அநேகமாக 2 மணி நேரங்கள் ஸ்தம்பிப்பது என்பதும், ஆர்ப்பாட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதும், அதை இலங்கை அரசு அனுமதிப்பது என்பதும், 20-20 ஐ.சீ.சீ. கிரிக்கட் அணியினரின் எயார் பஸ்களை 01.00 மணிக்கே வெளியேற்றியது என்பதும் சில அரசியல் தீர்மானங்களை இது தொடர்பில் ஆளும் தரப்பு எடுத்த பின்பே இதை அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் உயிருக்கு மேலாக மதிக்கும் நபி (ஸல்)அவர்களையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் விதம் திரைப்படம் எடுத்த கிறிஸ்தவ பாதிரியையும் அதை அங்கீகரித்த அமெரிக்க அரசையும் வெளியிட்ட யூடியுப் தளத்தையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது பாராட்டத்தக்கது.
அமெரிக்க தூதரகத்தின் உள்ளே செல்ல 5 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கினர். அங்கு சென்ற ஜமாஅத்தின் உயர்நிலை நிர்வாகிகள் அமெரிக்க தூதரகத்தின் அலுவலக பொருப்பு அதிகாரியிடம் கண்டனங்களை தெரிவித்ததோடு யூடியுபில் இருந்து அப்படம் நீக்கப்பட வேண்டும் என்று எச்சரிக்கையாக சொல்லி விட்டு வந்து அங்கு நடந்ததை கூடியிருந்த மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களிற்கும் எதிராக செயற்படும் அமெரிக்காவின் எம்பஸிக்கு  சென்று கண்டனம் தெரிவிப்பதும், மகஜர் கொடுப்பதும், தங்கள் அதிருப்தியை அவன் தரும் ஜுஸை பருகியவாறு வெளியிடுவதும் சிறுபிள்ளை தனமானது. வேடிக்கையானது. அமெரிக்கா இஸ்லாத்தின் பரம எதிரி என்பது தெளிவான விடயம். வேசைமடுவம் சென்று விபச்சாரியை சந்தித்து விபச்சாரத்திற்கு எதிரான எமது நிலைப்பாட்டை சொல்வது என்பது புரியாத போர்மூலா.. அமெரிக்க எம்பஸி நோக்கி நாம் அணிவகுப்பதில் தப்பில்லை. அங்கு சென்று மகஜர் கொடுப்பது தப்பாகவே படுகிறது. 

இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவம் தொடர்பான எதிர்கால ஐயங்களிற்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஆறுதல் தரும் ஒரு நட்சத்திரமா?எனும் நிம்மதி கலந்த சந்தோஷமான எதிர்பார்ப்புக்களுடன்…..
 
Abu Maslama
 
குறிப்பு:
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தூதுவராலயத்திற்கு சென்று ஜஸ் குடிக்கவில்லை. மாஜர் சமர்பிக்கவுமில்லை. மாறாக திரைபடத்தை நீக்குமாறும் திரைபடத்திற்கு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறும் அப்படி நடக்காவிட்டால் அமைரிக்காவுக்கு எதிராக நாம் போர் செய்யவும் தயார் எனவும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தது. எதிரியின் கோட்டைக்குள்ளே நுழைந்து சவால் விடுவது முஸ்லிம்களின் தைரியத்தையே காட்டுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger