நபிகள் நாயகம்(ஸல்) அவர்களையும்,இஸ்லாத்தையும் அவமதித்து அமெரிக்காவில்அண்மையில் வெளியிடப்பட்ட திரைப்படத்தை தொடர்ந்து,பிரான்ஸின் வாராந்த சஞ்சிகையொன்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து அரபு மற்றும்
முஸ்லிம் நாடுகளில் உள்ள 20பிரான்ஸிய தூதுவராலயங்கள் புதன்கிழமை முதல் மூடப்படவுள்ளதாக பிரானஸ் அறிவித்துள்ளது. பிரான்ஸின் வாராந்த சஞ்சிகையான "சார்லி ஹேப்டோ" சஞ்சிகையே குறித்த கேலிச்சித்திரத்தை 'பேச்சுச் சுதந்திரம்'என்ற போலிக்காரணத்தை முன்வைத்து வெளியிட்டுள்ளது.கடந்தவருடம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறித்து கேலிச்சித்திரம் வெளயிடப்போவதாக அறிவித்ததை அடுத்து "சார்லி ஹேப்டோ" காரியாலத்தின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.பேச்சுச் சுதந்திரத்துக்கு உத்தராவாதமளிக்கப்பட்ட நிலையில்அது குறித்து பொறுப்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என பிரான்ஸியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.மேலும், "சார்லி ஹேப்டோ" பத்ரிகையின் செயற்பாடானது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் செயலாகும் என பிரான்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சர் லோரண்ட் பெபியஸ் தெரிவித்துள்ளார்.குறித்த சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள கேலிச்சித்திரமானது பிரான்ஸிய மக்களிடையே ஆழந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என பிரான்ஸ் முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர்முஹம்மத் மவ்சூதி தெரிவித்துள்ளார். இந்நிகழ்வானது மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட பிரான்ஸில் பேச்சுச்சுதந்திரம் பற்றிய நவீன ஜனநாயகத்தின் எல்லை குறித்த விவாதத்தை தோற்றுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.அண்மையில் அமெரிக்காவில் வெளயிடப்பட்ட இஸ்லாத்துக்கு எதிரான திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசியா,ஆபிரிக்க,மத்தியகிழக்கு,மற்றும் சிலஐரோப்பிய நாடுகளில் ஆர்பாட்டங்கள் நடைபெற்றதுடன்,இதன் போதான மோதல்களில் குறைந்து 30பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏறத்தாள 5மில்லியன் டொலர் பெறுமதியான யூதர்களின் நன்கொடை பணத்தின் உதவியால் இஸ்லாத்துக்கு எதிரான அமெரிக்க திரைப்படம் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment