Home » » எகிப்தில் ஹிஜாப் அணிந்து செய்தி வாசித்த பெண்! (வீடியோ)

எகிப்தில் ஹிஜாப் அணிந்து செய்தி வாசித்த பெண்! (வீடியோ)

Written By STR Rahasiyam on Thursday, September 6, 2012 | 12:10 PM

இளம் நிறம் கொண்ட ஸ்கார்ஃபை அணிந்து பாத்திமா நபீல் வாசித்த மதியச் செய்தி எகிப்தின் வரலாற்றில் புதிய மைல் கல்லாக அமைந்தது. எகிப்தை பீடையாக பீடித்திருந்த முந்தைய சர்வாதிகார ஆட்சிகளில் பெண்கள் தலையை மறைக்கும் ஸ்கார்ஃப் அணிவதற்கு எழுதப்படாத சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது.

பெண்களுக்கு தலையை மறைக்காத உரிமை வழங்குகிறோம் என்ற போலி சுதந்திரத்தை காட்டி தங்களது மேற்கத்திய எஜமானர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே எகிப்திய சர்வாதிகாரிகளின் போக்கு அமைந்திருந்தது.

இந்நிலையில் எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் விளைவாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் இஃவானுல் முஸ்லிமீனின் முஹம்மது முர்ஸி. பெண்கள் சுதந்திரமாக தாங்கள் விரும்புஆடையை அணியலாம் என அனுமதி வழங்கப்பட்டது. இதனால் உண்மையான சுதந்திரம் என்பது என்ன என்பதை புரிந்துகொண்ட பாத்திமா நபீல் தனக்கு கண்ணியத்தை வழங்கும் ஆடையை தேர்வுச் செய்தார்.
தலையை மறைத்து தொலைக்காட்சியில் தோன்றுவது  முபாரக் ஆட்சி காலத்தில் இயலாத ஒன்றாக மாறியது. ஹிஜாப் அணிய தடையில்லை என்றாலும் தொலைக்காட்சியில் இது ஒரு நடைமுறையாக இருந்து வந்தது. ஸ்கார்ஃப் அணிந்த செய்தி வாசிப்போரையும்நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் தொலைக்காட்சியில் காட்டுவதை தடுப்பதில் தொலைக்காட்சி நிலைய அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தனர். அவ்வாறு ஹிஜாப் அணிந்த பெண்களுக்கும் கேமராவுக்கு பின்னிலும்ரேடியோவிலும் மட்டுமே வேலை வழங்கப்பட்டது.
ஹிஜாப் அணிவதற்கானஉரிமையை கோரி நீதிமன்றத்தை அணுகி தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பல பெண்களும் பெற்றபோதும் ஹுஸ்னி முபாரக்கின் ஏகாதிபத்திய அரசு அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
சேனல் ஒன் என்ற தேசிய தொலைக்காட்சி சானில்  ஸ்கார்ஃப் அணிந்து தோன்றிய பாத்திமா மதிய செய்திகளை வாசித்துவிட்டுசெய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘இறுதியில் புரட்சி வந்தடைந்துவிட்டது’ என கூறினார்.
இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கூறுகையில், “எகிப்தில் 70 சதவீத பெண்களும் தலையை மறைப்பவர்கள் ஆவர். ஆகவே இந்த மாற்றத்தில் ஆச்சரியமான ஒன்றல்ல” என கூறுகிறது. ஏராளமான அரபுசர்வதேச சானல்களில் தலையை மறைத்த பெண்கள் தோன்றுகிறார்கள்என்று முர்ஸியின் அரசில் செய்தி ஒலிபரப்பு அமைச்சராக பணியாற்றும் ஸாலிஹ் அப்துல் மக்சூத் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger