Home » » இஸ்லாத்தையும்,நபியவர்களையும் நிந்தனை செய்யும் அயோக்கியப் பத்திரிக்கை “தினக்குரல்” – வன்மையாக கண்டிக்கிறது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்

இஸ்லாத்தையும்,நபியவர்களையும் நிந்தனை செய்யும் அயோக்கியப் பத்திரிக்கை “தினக்குரல்” – வன்மையாக கண்டிக்கிறது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்

Written By STR Rahasiyam on Tuesday, September 25, 2012 | 12:36 PM


“தமிழ் பேசும் மக்களின் தனித்துவப் பத்திரிக்கை” என்ற பெயரில் வெளியாகும் தினக்குரல் என்ற அயோக்கியப் பத்திரிக்கை அமெரிக்க மனித வெறி நாய்கள் இஸ்லாத்தையும், நபியவர்களையும் கேவலப்படுத்திய அதே பாணியில் தனது அயோக்கியத் தனத்தையும் (22-09-2012) ஆம் திகதி வெளியிட்டுள்ளது.

“முஸ்லீம்களின் அப்பாவித்தனம்” என்ற பெயரில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை எதிர்த்து உலகம் முழுவதும் ஆர்பாட்டங்களும்ää பேரணிகளும் நடந்து வருவதும், பல நாடுகளில் அமெரிக்க தூதுவராலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டதும், பல நாடுகளில் அமெரிக்க தூதுவராலயங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதும். அனைவரும் அறிந்த பரபரப்பான செய்தியாகும்.
அமெரிக்காவின் குறிப்பிட்ட திரைப்படத்திற்கு எதிராகவும், அதன் முன்னோட்டக் காட்சிகளை வெளியிட்டுள்ள இணையதளத்தை கண்டித்தும் இலங்கையிலும் கடந்த 19.09.2012 புதன்கிழமை அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு அமெரிக்காவின் தூதுவராலயம் சென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.
நிலைமை இவ்வாரிருக்க “தினக்குரல்” என்ற விஷமப் பத்திரிக்கை முஸ்லீம்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக தனது பத்திரிகை வியாபாரத்தை அதிகரிதுக் கொள்ளும் சந்தர்ப்பவாத நரித் தனத்தினால் குறிப்பிட்ட திரைப்படம் தொடர்பான செய்தியைப் பிரசுரிக்கும் போது அதன் புகைப்படத்தையும் சேர்த்து பிரசுரித்துள்ளது.
சனிக்கிழமை வெளியான தினக்குரல் (22.09.2012) பத்திரிகையில் புதிய பண்பாடு எனும் அரசியல் பகுதியில் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இந்தப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பும் கூட இதே விஷமப் பத்திரிக்கை தனது ஆங்கில இலவச வெளியீடான “ஜூனியர் ஸ்டார்” இதழில் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்தும் விதத்தில் கார்ட்டூன் படத்தை பிரசுரித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. அப்போது இது தொடர்பில் அயோக்கியப் பத்திரிக்கையின் ஆசிரியர்பீடம் மன்னிப்பும் கேட்டிருந்தது.
அதே பாணியில் தற்போதும் தினக்குரல் தனது கீழ்த்தரமான புத்தியை வெளியிட்டுள்ளது.
மற்ற பத்திரிக்கைகளைவிட “தினக்குரல்” பத்திரிக்கையின் ஆசிரியர் பீடத்தில் இரண்டு முஸ்லீம்கள் கடமையாற்றுகின்றார்கள். குறிப்பிட்ட கட்டுரையை முஸ்லீம் ஒருவர் தான் எழுதியும் உள்ளார். நிலைமை இவ்வாரிருக்க ஏன் குறிப்பிட்ட புகைப்படத்தை தினக்குரல் வெளியிட வேண்டும்?
இலங்கை முஸ்லீம்களை தூண்டுவதின் மூலம் தனது வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்ற அற்ப, அயோக்கிய சிந்தனையை தவிர வேறு எந்த நோக்கவும் பத்திரிக்கை நிர்வாகத்திற்கு கிடையாது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
வன்மையாக கண்டிக்கின்றது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்
இஸ்லாத்தையும், முஸ்லீம்கள் உயிரைவிட மேலாக மதிக்கும் நபியவர்களையும் கேவலப்படுத்தும் விதமாக அமெரிக்கர்கள் செய்த அதே வேலையை செய்யும் “தினக்குரல்” பத்திரிக்கையை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கின்றது.
இந்தப் புகைப்பட விவகாரம் தொடர்பில் தினக்குரல் பத்திரிக்கை நிர்வாகம் தனது பத்திரிக்கையின் முதல் பக்கத்திலேயே பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இல்லாத பட்சத்தில் இது தொடர்பில் ஜனநாயக ரீதியிலான முன்னெடுப்புக்களை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். நபிகளாரை இழிவு படுத்திய திரைப்படத்தை பதிவேற்றம் செய்த youtube தளத்தையே பகிஷ்கரிக்க தயாராகிவிட்ட முஸ்லிம்கள், மத வாதத்தை சீண்டிப்பார்க்க தூபமிடும் தினக்குரல் பத்திரிகையை பகிஷ்கரிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல என்பதனை சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையாய் சொல்லிக் கொள்கின்றோம்.
குறிப்பு : தினக்குரல் பத்திரிக்கைக்கு எதிரான கண்டன அறிக்கை தினக்குரல் பத்திரிகை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger