பாகிஸ்தானில் கராச்சியில் உள்ள பால்டியா பகுதியில் ஆடை தயாரிப்பு (ஜவுளி) தொழிற்சாலை உள்ளது. அங்கு ஏராளமானவர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை அங்குள்ள 2-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் `மளமள' வென தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் தொழிற்சாலையில் ஒரு வாசல் மட்டுமே இருந்ததால் ஏராள மானவர்கள் உள்ளே சிக்கி கொண்டனர்.
இந்த தீவிபத்தில் 100 பேர் உடல் கருகி இறந்தனர். அவர்களில் 5 பேர் பெண்கள், இவர்கள் தவிர 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
தீ விபத்துக்கு மின்சார கோளாறே காரணம் என தெரியவந்துள்ளது. அங்கு தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு இந்த தீவிபத்து நடந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைக்கும் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment