ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்முனை கிளையினால் முதல் தடவையாக இவ்வருட ஸகாதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள் தர்மம்) ஊர் மக்களிடம் சுமார் 12,600 ரூபாய் வசூலிக்கப்பட்டு 18.08.2012 ம் திகதி கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தில் வசிக்கும் 8 ஏழைக் குடும்பங்களுக்கு சமமாக பங்கிடப்பட்டு கொடுக்கப்பட்டது.
வசதி படைத்த மக்களைப் போல் வறியோரும் பெருநாள் தினத்தில் சந்தோசமாக உண்டு மகிழ வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நாள் உணவு சமைப்பதற்கு தேவையான அரிசி, கோழி இறைச்சி, உப்பு, தேங்காய், சீனி போன்ற இதர பொருட்களும் அடங்கிய பொதி வழங்கப்பட்டது.
19.08.2012 சனிக்கிழமை அன்று நோன்புப் பெருநாள் தினம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெள்ளிக்கழமை (18.08.2012) இரவு முழுவதும் நமது கொள்கைச் சகோதரர்கள் ஃபித்ரா பெறத் தகுதியானவர்களின் வீட்டுக்கே கொண்டு சென்று வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:
Post a Comment