
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று முதலாம் பிரிவு பதூர் நகரைச் சேர்ந்த 20 வயதுடைய
இளைஞர் கணேசமூர்த்தி றியாஸ் என்பவராவார்.
அக்கரைப்பற்று 9 ம் பிரிவு மன்னங்குளம் சோமர் தென்னந்தோட்டத்தில் தலையில் பின்பகுதியில்
அடிகாயத்துடன் சடலம் ஒன்று கிடைப்பதை இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் பொதுமக்கள் கண்டு பொலிசாருக்கு தெரிவித்தனர்.இச்சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா சடலத்தை பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இதணையடுத்து சடலத்தை உறவினர் அடையாளம் காட்டிய பின்னர் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை உயிரிழந்தவர் நேற்று வியாழக்கிழமை காலை வழமைபோல வீட்டில் இருந்து அக்கரைப்பற்று நகரில் உள்ள கடை ஒன்றில் றொட்டி போடும் வேலைக்குச் சென்றவர் சம்பவதினமான இன்று வெள்ளிக்கிழமை காலைவரை வீடு திரும்பாத நிலையில் இவரை அடித்துக் கொலை செய்துவிட்டு பொலித்தீனால் சுற்றிக் கொண்டுவந்து தென்னந்தோட்டத்தில் போடப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
0 comments:
Post a Comment