பழமைவாயந்த புனித அல்குர்ஆன் பிரதிகள் கண்காட்சி
இந்தியாவின் காஷ்மீரின் சிறீநகரில்திங்கட்கிழமை
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இருநாட்கள் கொண்ட இக்கண்காட்சியை,
காஷ்மீரின் முதலமைச்சர் உமர் அப்துல்லாஹ்
ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வுகளை சிறீநகரில்
அமைந்துள்ள காஷ்மீர் கலை,கலாச்சார மற்றும்
மொழிகள் அமைப்பு ஏற்பாடுசெய்துள்ளது. பழமைவாய்ந்த
குhஆன் பிரதிகளை எதிர்கால சந்ததியினருக்காக
பாதுகாப்பது எமது கடமையும்,பொறுப்புமாகும் என
உமர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ள அல்குர்ஆன் பிரதிகள் காஷ்மீரின்
திறமைவாய்ந்த கலைஞர்களால் புதியமுறை
எழுத்தணிக்கலைகளுடன் உருவாக்ப்பட்டவைகளாகும்.
1981ஆம் ஆண்டு இருநாட்கள் கொண்ட புனித
அல்குர்ஆன் கண்காட்சி சிறீநகரில் நடத்தப்பட்டது.இம்முற
நடத்தப்படும் இக்கண்காட்சி 30வருடங்களின் ஒழுங்கு
செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி.1238
இல் வாழ்ந்த புகழபெற்ற எழுத்தணிக்கலைஞரான
பதுஹூல்லாஹ் காஷ்மீரியால் எழுதப்பட்ட நுஸ்கா
பதுஹூல்லாஹ் காஷ்மீரி உட்பட நூற்றுக்கும் அதிகமான
புனித அல்குர்ஆன் பிரதிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கி.பி.1594 இல் முஹியித்தீன் குரைஸியால் குங்கும மையைப்
பணன்படுத்தி எழுதப்பட்ட உலகலிலேயே ஒரேயொரு புனித
அல்குர்ஆன் மாதிரியாக விளங்கும் அல்குர்ஆன் பிரதியும்
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன்,நபி சுலைமான்(அலை)
அவர்கள் சீபா அரசிக்கு எழுதிய கடிதத்தைப் பற்றிக்
குறிப்பிடும் புனித அல்குர்ஆன் வசனம் ஒட்டக எழும்பில்
எழுதப்பட்ட பகுதியும் இக்கண்காட்சியில்
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.தேசிய எழுத்துக்கலை
பணியகம் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களுடன்
இணைந்து பெரியளவில் பழமைவாயந்த புனித
அல்குர்ஆன் பிரதிகள் கண்காட்சியொன்றை ஏற்பாடு
செய்யவுள்ளதாக காஷ்மீர் கலை,கலாச்சார மற்றும்
மொழிகள் அமைப்பின் தலைவர் காலித் பஷீர் அஹமட்
தெரிவித்துள்ளார்.
nanri m u
0 comments:
Post a Comment