Home » » சவூதி அரேபியாவில் புத்தரை வழிபட்ட இலங்கையரை பார்க்க, மனைவிக்கு இலவச டிக்கட்

சவூதி அரேபியாவில் புத்தரை வழிபட்ட இலங்கையரை பார்க்க, மனைவிக்கு இலவச டிக்கட்

Written By STR Rahasiyam on Saturday, July 14, 2012 | 2:37 AM


TN
சவூதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையரின் உண்மை நிலையை அறிந்து வருவதற்கு குறித்த நபரின் மனைவிக்கு இலவசமாக விமான டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொடுக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் நடவடிக்கை எடுத்துள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சவூதியின் றியாத் நகரில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். புத்தர் சிலையை வைத்து வழிபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பதியத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த பி. பி. துங்கசிறி என்பவர் சவூதியில் கைது செய்யப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், வேறு குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த நபர் கைது செய்யப் பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேராவை, துங்கசிறியின் மனைவி சந்தித்திருந்தார். இச்சந்திப்பின் போது தனது கணவரின் கைதுக்குக் காரணம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் பற்றி அமைச்சரிடம் அவர் கலந்துரையாடியிருந்தார்.

இதற்கமைய, சவூதிக்குச் சென்று கணவரின் கைதுக்கான காரணத்தை அறிந்து வருவதற்கான விமானச் சீட்டுக்களை இலவசமாகப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் டிலான் பெரேரா இணக்கம் தெரிவித்தார். சவூதிக்குச் சென்று கணவரை நேரில் சந்தித்து அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை அறிந்து வருமாறும் அமைச்சர் கூறியுள்ளார். அதேநேரம், றியாத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் நபரின் விடுதலை தொடர்பில் சவூதியி லுள்ள இலங்கைத் தூதரத்தின் ஊடாக ஆராய்ந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்து ள்ளது. குறித்த நபர் தொடர்பில் றியாத் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டிருப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger