(புகைப்பட உதவி பர்ஹான்)
இலங்கைல் கதிர்காமம் எனும் ஊரில் இந்த கபூர் ஸ்தானம் அமைந்துள்ளது இங்கு சில அறியாத மக்கள் சென்று பிரார்த்திக்கின்றனர். இது பிழையான நடைமுறை என்பதை பின்வரும் விளக்கத்தின் மூலம் அறிய முடிகிறது.
அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. "அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை; எதுவும் இல்லை'' என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும், ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகளும் ஆற்றல்களும் அல்லாஹ்வுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும், அல்லாஹ் வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்த வொன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் என்று இஸ்லாம் கூறுகிறது.
இவ்வாறு இறைவனுக்கு இணை கற்பித்தல், மனிதர்கள் செய்கின்ற குற்றங்களிலேயே மிகவும் பெரிய குற்றம் எனவும், இக்கொள்கை யிலிருந்து திருந்திக் கொள்ளாமல் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு மன்னிப்பு இல்லை; என்றென்றும் நரகத்தில் கிடப்பார் என்றும் இஸ்லாம் கூறுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72)
இறைவா! இவ்வாறான இணைவைப்பை விட்டு அனைத்து மக்களையும் காப்பாயாக.
இந்த செய்தியை இங்கே Facebook , Twitter மூலம் பகிர்ந்து மார்க்க பணிக்கு உதவுங்கள்..
0 comments:
Post a Comment