Home » » மீள்புனரமைக்கப்பட்ட யாழ். சின்னப்பள்ளிவாயல் திறக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)

மீள்புனரமைக்கப்பட்ட யாழ். சின்னப்பள்ளிவாயல் திறக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)

Written By STR Rahasiyam on Monday, July 16, 2012 | 5:36 AM


மீள் புனரமைக்கப்பட்ட யாழ். சின்னப்பள்ளிவாயலின் திறப்புவிழா மற்றும் விசேட தொழுகை நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை சின்னப் பள்ளிவாயலின் தலைவர் ஜனூஸ் தலைமையில் நடைபெற்றது நிகழ்வின்  பிரதம விருந்தினராகக் அமைச்சர் றிசாட் பதியுதீன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த காலங்களில் தமிழ் மக்களுடன் இணைந்து முஸ்லீம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தவர்கள். அந்த ஒற்றுமையை சிதைத்தவர்கள் புலிகளே. சிறிய பிரச்சினைகள் உருவாகின்ற போது அதனை சமூகப் பிரச்சினையாக்காது சுமுகமாகத் தீர்க்க முயல வேண்டும்.

வடபகுதியில் ஏனைய மாவட்டங்களைவிட யாழ் மாவட்டத்திலேயே இடநெருக்கடி தொடர்பான பிரச்சினையுள்ளது. இதனை கவனத்திலெடுத்து காணி இல்லாதவர்களிற்கு காணி வழங்குவதற்கான  நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சா டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதியளித்துள்ளார்.

எனவே மீள் குடியமர்ந்துள்ள மக்களது வாழ்வை மேம்படுத்த கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களாலும் அவரது கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களாலேயே முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் கருத்துரையினை ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் நிகழ்த்துகையில் முஸ்லிம் மக்களின் பிரச்சினை தொடர்பாக நாம் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம். இதேவேளை இம்மக்களை ஓர் இரவிற்குள் உடுத்த உடையுடன் தென்பகுதிக்கு புலிகள் விரட்டிய போது அம்மக்களிற்கான அனைத்து உதவிகளையும் வழங்கி செயற்பட்டவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களே.

அன்று இம்மக்களது சொத்துக்களை அபகரித்தவர்கள் இன்று அவற்றை தமது உடைமைகளாக்கியுள்ள கீழ்த்தரமான செயற்பாடுகளையும் கண்கூடாகக் காண்கின்றோம். எனவே இம்மக்களது வாழ்வாதார பிரச்சினைகளையும் ஏனைய பிரச்சினைகளையும் தீர்த்து முஸ்லீம் மக்களது சுதந்திரமான சுபீட்சமான வாழ்வுக்கு வழிவகுப்போமென அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் வர்த்தகர்களின் நன்கொடை நிதியில் இருந்து 37 இலட்சம் ரூபா செலவில்; சின்னப் பள்ளிவாயல் கட்டிட மீள் நிர்மாணக்குழுவால் இப்பள்ளிவாயல் புனரமைப்புச் செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடக்கக்கது.

இந்நிகழ்வில் மௌலவிமார் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் அஸ்கர் யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் சட்டத்தரணி ரமீஸ் அமைச்சு அதிகாரிகள் வர்த்தகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




NANRI-JM
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger