அரபு நாடுகள் இலங்கைக்கு அன்பளிப்புச்செய்த பெருந்தொகையான பேரீச்சம் பழங்களின் பங்கீட்டில் முறைகேடுகள் நிகழ்வதாக இஸ்லாமிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவர் ரியாஸ் ஸாலி குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் கலாசார திணைக்களம் மூலம் முஸ்லிம்களுக்கு விநியோகிக்கவென கிடைத்த பேரீச்சம்பழ பங்கீட்டிலேயே இவ்வாறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், சில அரசியல்வாதிகள் தமக்கு வேண்டியவர்களுக்கு அவற்றை விநியோகம் செய்துள்ளதுடன், ஒருதொகை பேரீச்சம் பழம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரபுநாடுகளிலிருந்து இலவசமாக கிடைத்த பேரிச்சம் பழத்தை விநியோகம் என்ற பெயரில் சில அரசியல் தலைவர்கள், தமது செலவில் பேரீச்சம்பழங்களை வழங்குவதைப் போல விநியோகித்து அரசியல் இலாபம் தேடுவதாகவும் அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
JM NEWS.
0 comments:
Post a Comment