அர்மடில்லோஸ்(Armadillos) என்றழைக்கபடும் விலங்கினம், தனது உணவை கண்டுபிடிக்க வேண்டி, பூமியைத் தோண்டும் போது சுவாசிப்பதில்லை. உண்மையில் இந்த விலங்கினம் ஆறு நிமிடங்கள் மூச்சையடக்கி தனது உணவைத் தேடும் திறன் கொண்டவை.
இது பூமியை தோண்டி அதன் உள்ளிருக்கும் புழு மற்றும் பூச்சியினங்களை தனது கூர்மையான மோப்ப சக்தியை பயன்படுத்தி கண்டுபிடித்து உணவாக்கி கொள்கிறது.இந்தச் செயலை செய்து கொண்டிருக்கும்போது, இந்த விலங்கினம் எப்படி சுவாசிக்கிறது என்பதுதான் வியப்பிற்குரியது.இது பூமியை தோண்டும் போது ஆறு நிமிடங்கள் வரை மூச்சை அடக்கி தனது உணவை தேடும் திறன் கொண்டவை.
தனது உணவை கண்டுபிடிக்க, அல்லாஹ் வழங்கிய, ஆறு நிமிடங்கள் வரை மூச்சையடைக்கும் இந்த ஆற்றலுக்காக இவை வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். வல்ல அல்லாஹ் படைப்பினங்களுக்கு வழங்கியிருக்கும் இந்த ஆற்றல், அவனது படைப்பாற்றலுக்கு ஓர் அத்தாட்சி. இந்த ஆற்றல் வல்ல அல்லாஹ் உயிரினங்கள் மீது கொண்டிருக்கும் கருணைக்கு ஒரு உதாரணம். அவன் மாபெரும் கருணையாளன் என்பதை அருள்மறை குர்ஆனின் வசனம் நமக்கு உணர்த்துகிறது:
“அன்றியும்(நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மிகைத்தவன் மிக்க கிருபை உடையவன்”(அல்குர்ஆன் 26:9 ).
0 comments:
Post a Comment