அல்லாஹ்வின் திருப்பெயரால்…
“விவேகத்துடனும்,அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக!
அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!”
அல்குர்ஆன் (16 : 125)
அல்குர்ஆன் (16 : 125)
தஃவாக்களத்தில் கருத்து முரண்பாடுகள் எழுவது இயல்பு. அக்கருத்து முரண்பாடுகளை களைவதற்குரிய அறிவார்ந்த வழிமுறை மனந்திறந்த கலந்துரையாடல் மற்றும் அழகிய விவாதக் களங்கள் மட்டுமே! ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இவ்விரு வழிமுறைகளின் ஊடாக தன்னோடு முரண்படும் உலமாக்களை களத்தில் சந்தித்து கருத்து முரண்பாடுகளை களைவதற்கு பெரிதும் முயற்சிக்கிறது. தனிமனித வழிபாடு தளைத்தோங்கி மீண்டும் ஒரு மத்ஹபு கலாசாரம் உருவாகாமல் இருப்பதற்கு இதுவே ஆரோக்கியமானதும் அறிவுபூர்வமானதும், அல்குர்ஆன் விதந்துரைக்கக்கூடியதுமான வழிமுறையுமாகும்.
உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதாயின் இரு தரப்பினரும் மக்கள் மன்றத்தில் தங்கள் வாதங்களுக்கான சான்றுகளை வைத்து உரசிப்பார்க்க வேண்டும். ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறுவோரை அசத்தியவாதிகள் என மக்கள் அடையாளம் கண்டுகொள்வர். இதுவும் அல்குர்ஆன் கூறும் அணுகுமுறையே!
“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்” என்று கேட்பீராக! (2 : 111)
மார்க்க ரீதியான முரண்பாட்டை களைவதற்கு இஸ்லாம் இயம்பும் இத்தனை வழிகளையும் SLTJ திறந்து வைத்துள்ள போதும், எம்மோடு பல விடயங்களில் முரண்பட்டு நிற்கும் அக்கரைப்பற்று அன்ஸார் தப்லீகி மற்றும் அப்துல் ஹமீத் ஷரஈ உள்ளிட்டோர் விவாதக்களத்தில் எம்மோடு நெஞ்சு நிமிர்த்தி நின்று, ஆதாரங்களை அள்ளி வீசி, எம்மை வழிகேடர்கள் என்று நிரூபிப்பதற்கு மாற்றமாக, மிம்பர் மேடைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும், எவரும் எதிர் கேள்வி கேட்க முடியாத வண்ணம் நான்கு சுவருக்குள் தனியே வீடியோ முன் நின்றவன்னமும் எம்மை காரமான வார்த்தைகள் மூலம் சூடு பரக்க விமர்சிக்கின்றனர்.
SLTJ என்போர் நவீன மத்ஹபு வாதிகள்! TNTJ யை கண்மூடி பின்பற்றுபவர்கள்! இவர்களின் இமாம் P.J! சுய ஆய்வு அற்ற முகல்லிதுகள்! பலகீனமான ஹதீஸ்களை வைத்து சட்டம் இயற்றும் மத்ஹபு வாதிகள்! ஹதீஸ்களை பகுத்தறிவைக் கொண்டு மறுக்கும் முஃதஸிலாக்கள்! என்றெல்லாம் எம்மை வாய் கிழிய வெளியே விமர்சித்துத் திரியும் அதிபண்டித அன்ஸார் ஆய்வாளர் அவர்களே! அதி மேதாவி அப்துல் ஹமீத் ஷரஈ அவர்களே!
உங்கள் பார்வையில் SLTJ என்ற அமைப்பு ‘வழிகேடு’ ‘மத்ஹப்’ என்றிருப்பின், எம்மிடம் குடிகொண்டுள்ள வழிகேட்டை ஏன் எமக்கு முன்னிலையில் நேரடியாய் விவாதித்து நிரூபிப்பதற்கு தயங்குகிறீர்கள்? அறைக்குள் இருந்து ஆடும் நீங்கள் ஏன் அம்பலத்தில் வந்து ஆட அஞ்சுகிறீர்கள்? ஆய்வாளர், ஹதீஸ் கலை ஞானப்பண்டிதர் என்றெல்லாம் உங்கள் விசிரிகளால் புகழப்படும் நீங்கள் ஏன் விவாதக்களத்தில் உங்கள் அறிவுத் தீட்ஷன்யத்தை நிலைநாட்ட பின்வாங்குகிறீர்கள்? பூனையைக் கண்டு பதறியோடும் எலியைப் போன்று எம்மைக்கண்டு ஓடுகிறீர்கள்?
அப்படியாயின், SLTJயை நாம் விமர்சிப்போம். ஆனால், அவர்களோடு விவாதிக்க மாட்டோம்! வழிகேடர்கள் என்போம். ஆனால், அதனை அவர்கள் முன்னிலையில் நிரூபிக்க மாட்டோம்! நாம் சொல்வதை கேளுங்கள்! எதிர் கேள்வி கேட்கக் கூடாது! என்பது தான் உங்கள் நிலைபாடு எனில், அன்ஸார் மவ்லவி அவர்களே! நீங்கள் தான் ‘அன்ஸார் மத்ஹபை’யும், ‘அன்ஸார் முகல்லிதுகளையும், ‘வழிகேட்டையும்’ இந்நாட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். எம்மோடு விவாதித்தால் எங்கே உங்கள் அன்ஸார் மத்ஹபுக் கோட்டை சுக்கு நூராக வெடித்துச் சிதறிவிடுமோ என்ற அச்சமும், மக்கள் அன்ஸாரின் உண்மை முகத்தையும் அவரின் ஆய்வுத்தரத்தையும் அறிந்துகொள்வர் என்ற பீதியுமே எம்மோடு விவாதத்திற்கு வரவிடாமல் தொடை நடுங்கியாக உம்மை மாற்றியுள்ளது.
எமது விவாத அழைப்பை நீங்கள் புறக்கணிப்பின், உங்கள் வார்த்தைகளை வேதவெளிப்பாடாய் ஏற்றிருக்கும் உங்கள் முகல்லிதுகளே உங்கள் சட்டையை பிடித்து களத்துக்கு இழுத்து வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுமா? சூனியத்தினால் பாதிப்பை ஏற்படுத்த முடியுமா? சர்வதேசப் பிறை சரியானதா? தாடியை வெட்டலாமா? கரண்டைக்குக் கீழ் ஆடை அணியலாமா? உள்ளிட்ட இதுபோன்ற அத்தனை முரண்பாடுகளையும் பட்டியலிட்டு மக்கள் மத்தியில் விவாதிக்க வருமாறு SLTJ அன்ஸார் தப்லீகியையும், அப்துல் ஹமீத் அவர்களையும் அன்போடு அழைக்கிறது. பதில் தருவாரா அன்ஸார்?

This comment has been removed by a blog administrator.
ReplyDelete